தலைப்புச் செய்தி

மூத்த அரசியல் வர்ணனையாளரும் பத்திரிகையாளருமான விக்டர் ஐவன், பாராளுமன்றத்தை கூட்டாதது தனது அடிப்படை உரிமைகளை மீறியதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, வீடு திரும்ப முடியாத மோதர ஸ்ரீ வெங்கடேஸ்வர இந்து கோவிலின் திருமண மண்டபத்தில் தங்கியுள்ள உணவு மற்றும் குடிநீர் இல்லை என்பதைக் காட்டி, முகநூலில் ஒரு சில குறிப்புகளை பதிவேற்றிய இளைஞர்கள் இருவரை மே 04 அன்று மோதர பொலிசார் கைது செய்துள்ளதாக (anidda.lk) தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் அறுகம்பை பிரதேசத்திற்கு  நேற்று நள்ளிரவு 1 மணிக்கு பின்னர் 3௦ க்கும் மேற்பட்ட உல்லாசப்பயணிகள் வருகை தந்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

 ஏப்ரல் 30 முதல் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் வரை பொதுச் செலவு அதிகாரங்களை வைத்திருப்பதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை நிரூபிக்குமாறு முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சவால் விடுத்துள்ளார்.

நாடு எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடியிலிருந்து தப்பிக்க அரசாங்கம் எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெற வேண்டும்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் பிரதமரை சந்தித்து அவருக்கு தகவல் அளித்துள்ளார். இது தொடர்பான திட்டங்கள் எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களை நிராகரிக்க வேண்டும், புதியவேட்பு மனுக்களை  ஏற்க வேண்டும் என்று கூறுவது பிழை என்று மூத்த அரசியல் வர்ணனையாளரும் மூத்த பத்திரிகையாளருமான குசல் பெரேரா கூறினார்.

கொவிட் 19, பாதிப்பிற்காக இலங்கைக்கு வெளிநாட்டு  நிதி உதவி கிடைக்கவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நேற்று (மே 04) அலரி  மாளிகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்டு இலங்கையிலிருந்து தப்பிச் சென்றபோது எட்டு வயதாக இருந்த சுகுமாரன் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தமிழகக் கடற்கரையில் இறங்கினார்.

வெளியுறவு அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தனிப்பட்ட வேலைக்காக நெதர்லாந்து சென்ற போது  கொரோனாவின் காரணமாக அங்கு சிக்கிக் கொண்டார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனியார் துறை நிறுவனங்களில் பணி புரியும்  'தொழிளாலர்களுக்கு வேலை இழக்கும் ஆபத்து இருப்பதாக தேசிய தொழிற்சங்க மையம் (என்.டி.யூ.சி) குற்றம் சாட்டுகிறது.

பொது இடங்களை சுத்தப்படுத்தும் நோக்கில் கிருமி நாசினிகளை தெளிப்பதால் அவை மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரித்துள்ள, இலங்கையின் விஞ்ஞானிகள் குழு ஒன்று, மாறாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படமாட்டாது என, உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கொவிட் காரணமாக வருமானத்தை இழந்தவர்களுக்கு ரூ. 5,000 வழ ங்கப்பட்டுள்ளது இது அதிவேக நெடுஞ்சாலைக்கு வழங்கிய 850 கோடியினை விட விட நான்கு மடங்கு அதிகம்.

பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான கேள்வியிலிருந்து  பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் செய்யப்பட்ட செலவுகள் குறித்து கேள்விகளுக்கு பதிலளிப்பது இந்த நாட்களில் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவின் பணிகளில் ஒன்றாகும். இந்த பதில்கள் ஜனாதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் அமைந்தவை என பி.பி ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திங்கள்கிழமை (04) கூட்டவிருந்த கலந்துரையாடலை புறக்கணிக்க ஐக்கிய தேசிய கட்சி முடிவு செய்துள்ளது.

சுமார் 400 தொழிலாளர்களை சம்பளமின்றி ஒப்பந்த விடுப்பில் அனுப்ப ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

Show more post

Apekshakaya

பிந்திய செய்தி