தலைப்புச் செய்தி

ஜனாதிபதி கோதபாயவின் பல கொள்கைகளுடன் நான் உடன்படவில்லை என்றாலும்,அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரை அவர் தான் எனது ஜனாதிபதியாக இருப்பார் என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா ஒழிப்பிற்கு பணம் தேவைப்படுவதாகக் கூறி அரசாங்கம் பல்வேறு தனவந்தர்களிடமிருந்தும் வியாபாரிகளிடமிருந்தும் சேகரித்த கொவிட் அனர்த்த நிதியத்தில் பணம் செலவீடு செய்த முறை மற்றும் எஞ்சியுள்ள பணம் சம்பந்தமாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக தற்போது மூடப்பட்டிருக்கும் கொழும்பு புறக்கோட்டை மெனிங் மார்கட்டிற்குச் சொந்தமான வர்த்தகப் பெறுமதிவாய்ந்த மிகப்பெரிய காணியை விற்கும் திட்டத்திற்கமைய  அங்கு காணி அளவீடு செய்யப்பட்டு வருகிறது.

கொரோனாவால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்கவேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் முஸம்மில் வேண்டுகோள் விடுத்துள்ளார் என ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

கல்முனை மாநகரத்திற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுகின்றது. குறித்த பகுதிக்கு அன்றாடம் சுமார் 10 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வருகை தந்த வண்ணம் உள்ளன.

நவம்பர் 16ஆம் தேதி முதல், 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்குப்  பாடசாலைகள் திறக்கப்படுமென அறிவித்திருந்த தமிழக அரசு அந்த அறிவிப்பை ரத்துசெய்துள்ளது. எனவே பாடசாலைகள் திறக்காமல் இருப்பதும் அது குறித்துத் தொடர்ந்து மாறுபட்ட அறிவிப்புகள் வருவதும் பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிகிச்சையின்றி அல்லது மேலதிகாரிகளின் கவனயீனத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

போகம்பர பழைய சிறைச்சாலைக்குள்  கொரோனா வைரஸ் தீவிரமாக இருப்பதால் தம்மையும் PCR பரிசோதனை செய்யுமாறு கோரி தடுப்புக் கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைன் பிரதமர் இளவரசர் கலிபா பின் சல்மான் அல் கலிஃபா தனது 84 ஆவது வயதில் மரணம் அடைந்துள்ளார்.

மேல் மாகாணத்திலிருந்து யாரும் எந்தக் காரணத்தைக் கொண்டும் வெளி மாகாணங்கள் எதற்கும் செல்ல முடியாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மாவட்ட செயலாளர்களுடன், சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கை, மதங்களுக்கு இடையிலான சமத்துவமின்மையை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதோடு, கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களை கட்டாயமாக தகனம் செய்வதற்கான அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைய வேண்டுமென  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என சுகாதார தரப்பின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்டு 2ம் கட்ட பரிசோதனையிலுள்ள கொவிட் – 19 வைரஸ் தடுப்பூசியை இந்நாட்டில் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லீட் நிவ்ஸ் இணையத்தளம் கூறுகிறது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சியினால் சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்தி