ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்தாது  சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமித்தால்  மக்கள் விடுதலை முன்னணியின் ஒத்துழைப்பினைப்

பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியுள்ளார்.

பிரதமரின் பிரதிநிதி திணேஷ் வீரக்கொடி கடந்த 11ம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவைச் சந்தித்து  மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சிவில் அமைப்புக்களின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும் என உறுதியளித்தால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாபதி வேட்பாளர் நியமனத்தை சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்குவதற்கு ஐ.தே.கட்சி தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க ஆயத்தமாக உள்ளதாக அறிவித்திருந்தார்.

இதனிடையே சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கூட்டணியின் உயர் மட்ட பிரதிநிதியினர் நேற்று (15) கொழும்பு அலறி மாளிகையில் பிரதமரைச் சந்தித்து பேசிய போது கருத்து தெரிவித்த கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஒத்துழைப்பை வழங்கிய இனவாதம் மற்றும் மதவாதத்திற்கு எதிராக புதிய அரசியலமைப்பைக் கொண்டு வந்த மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வது முக்கியமானது என சுட்டிக் காட்டியுள்ளார்.

ஜே.வி.பியின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை!

ஜே.வி.பி தொடர்பில் ஐ.தே.கட்சியினுள் தோன்றியிருக்கும் பேச்சுக்கள் தொடர்பில் ஜே.வி.பியின் பதில் எவ்வாறானது என theLeader.lk ன் கேள்விக்கு அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறும்போது ஜாதிக ஜனபல வேகயே ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திசாநாயக்கா இம்முறை ஜனாதிபதித் தேர்தலில்  நிச்சயமாக போட்டியிடுவார் எனத் தெரிவித்தார்.  இவ்விடயத்தில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


இதனிடையே மக்கள் விடுதலை முன்னணி அரசியல் பீட உறுப்பினர் கே.டி லால்காந்த கருத்து தெரிவிக்கும் போது, விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தளில் மக்கள் விடுதலை முன்னணி மணி சின்னத்தைக் கைவிட்டுவிட்டு வேறு சின்னத்தின் கீழ் போட்டியிவுள்ளதாகத் தெரிவித்தார்.

கலேவெல புவக்பிட்டிய பிரதேசத்தில் எதிர்பார்ப்பின் வேட்பாளரை வெல்ல வைப்போம்!, என்ற
உரையாடல் ரீதியிலான மக்கள் கூட்டம் என்ற போர்வையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனபல வேகய  அமைப்பு நேற்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்

பிந்திய செய்தி