சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க இம்முறை பொதுத்தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கைச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

அவரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்பிரிவின்  செயலாளர் வீரகுமார திசாநாயக்க இச்சந்தர்ப்பத்தில் மொட்டுக்கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் நேற்று (16) பகல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு முடிவொன்றுக்கு வர இருந்த போதிலும் அது தோல்வியில் முடிவடைந்துள்ளது.

வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்தில் 2 பேரும் மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டத்தில் சி.சு. க கைச்சின்னத்தில் போட்டியிடவுள்ளது. எது எப்படி இருந்த போதிலும் சி.சு .க யின் தலைவர் மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையிலும் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா பதுள்ளையிலும் மகிந்த அமரவீர ஹம்பாந்தோட்டையிலும் மொட்டுச்சின்னத்தில் போட்டியிட வேட்பு மனுவில் ஒப்பமிட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

யாழ்ப்பாணம், வன்னி, நுவரெலிய மாவட்டங்களில் சி.சு. க கைச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக நேற்றைய ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo

Apekshakaya

பிந்திய செய்தி