கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்காக தேசிய செயல்பாட்டு மத்திய நிலையத்தில் ஊடக சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமானது.

இதன் போது கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான மேலும் 6 பேர் இன்று (17) இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை ஐரோப்பா, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் தங்களை பதிவு செய்து கொள்வதற்காக மேலும் 5 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

0112 444 480, 0112 444 481, 0115 978 720, 0115 978 730, 0115 978 734 ஆகிய இலக்கங்களே இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு வருகை தந்தவர்களை 119 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு இன்று காலை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவிற்கு முரண்பட்ட வகையில் செயல்படுவோருக்கு எதிராக தொற்றுத் தடைக்காப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொடர்பில் போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த இருவர் தொடர்பில் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்தி