அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பரிசோதனை அடிப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7000 பேர் இறந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தாக்குதலைத் தடுக்க இதுவரை எந்த தடுப்பு ஊசி மருந்துகளும் இல்லாமல் இருந்தது. இந்தியா, நார்வே ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா தயாரித்து இருக்கும் தடுப்பு ஊசி மருந்து இன்று பரிசோதனை விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த பேரன் ஒருவருக்கு செலுத்தப்பட்டது.

இந்த பரிசோதனையில் தன்னார்வலர்கள் 45 பேர் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கலந்து கொண்டவர்களில் இருந்து அமெரிக்காவைச் சேர்ந்த 43 வயதான ஜெனிபர் ஹல்லர் முதலில் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பரிசோதனை அடிப்படையில் தடுப்பு ஊசி மருந்து செலுத்தப்பட்டது. அவர் தற்போது நலமாக இருக்கிறார். மேலும், மூவருக்கு இந்த பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது.

samayam tamil

இதுகுறித்து இருவருக்கு தாயான ஜெனிபர் கூறுகையில், ''இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதை செய்திருக்கும் சந்தோஷம் தற்போது எனக்கு கிடைத்து இருக்கிறது. தொடர்ந்து உடல்நிலையை கவனித்து வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். மீண்டும், 4 வாரங்களுக்குப் பின்னர் மேலும் ஒரு டோஸ் வழங்கப்படும். 14 மாதங்களுக்கு இந்த பரிசோதனை தொடரும் என்று கூறியுள்ளனர். பக்க விளைவுகள் இருக்குமா என்பது தற்போது தெரியவில்லை. போகப் போகத்தான் தெரியும்'' என்றார்.

கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி மருந்து எப்போது கிடைக்கும்?

அமெரிக்காவின் சியட்டில் நகரில் இருக்கும் கைசர் பெர்மனன்ட் வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் திங்கள் கிழமை நடந்த இந்த சோதனைக்கு தேசிய சுகாதார நிறுவனம் நிதி வழங்கியுள்ளது.

இன்று சோதனையாக இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டாலும், முழு நிவாரணம் அளிக்கும் மருந்தாக உருவாக இன்னும் ஓராண்டு முதல் 18 மாதங்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

இந்தியர்களுக்கு கூட அனுமதி இல்லை; அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் கொரோனா வைரஸ்!

இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து, தற்போது 124 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது. இதுவரை டெல்லியில் ஒருவர், கர்நாடகாவில் ஒருவர் என மொத்தம் இந்தியாவில் இதுவரை இருவர் இந்த வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

கொரோனோவின் அறிகுறிகள் இருமல், காய்ச்சல், மூச்சு திணறல். பெரும்பாலானவர்களுக்கு இந்த அறிகுறி இருக்கலாம். வயதானவர்களுக்கு இந்த அறிகுறிகளுடன் நிமோனியா தொற்றும் சேர்ந்து கொள்ளலாம் என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தொற்று இருப்பதை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டால் இரண்டு வாரங்களில் குணமடைந்து விடலாம் என்றும், அதிக தொற்று பாதிப்பு இருந்தால் மூன்று வாரங்களில் இருந்து ஆறு வாரங்கள் பிடிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிகுறிகள் தெரிந்தால் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரையும் வழங்கியுள்ளது.

logo

Apekshakaya

பிந்திய செய்தி