புத்தளம், சிலாபம் மற்றும் நீர்க்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, இன்று (18) மாலை 4.30 முதல் மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன சற்றுமுன்னர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று பரவலை தடுப்பதற்காக குறித்த பிரதேசத்திற்கு இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, புத்தளம் மாவட்டத்திற்குரிய கறுவலகஸ்வெவ, வணாதுவில்லுவ, நவகத்தேகம, முந்தல், உடப்பு, சாலியவெவ மற்றும் நுரைச்சோலை ஆகிய பிரதேசங்களுக்கு இன்று (18) மாலை 4.30 முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதேபோல், சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாபம், வென்னப்புவ, மாரவில, மாதம்பே, கொஸ்வத்தை, தங்கொடுவ மற்றும் ஆராச்சிகட்டுவ பிரதேசங்களுக்கும் மற்றும் நீர்க்கொழும்பு பிரிவின் கொச்சிக்கடை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கும் இந்த ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

logo

Apekshakaya

பிந்திய செய்தி