ஐ.தே.க எமது தாய்க்கட்சி என்பதை மறந்து விட வேண்டாம் எங்களுக்கு எப்போதும் எதிரி ராஜபக்சக்களேதான் நாம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சமகி ஜன பலவேகய கட்சியில் போட்டியிட்டாலும் எமது தாய்க்கட்சி ஐ.தே.க என்பதை மறந்துவிடக்கூடாது.

ஐ.தே க யின் தலைவர் ரணில் விக்ரமசிங்க யானைச்சின்னத்தில் போட்டியிடும் அதே வேளை முன்னாள் அமைச்சர் சாகல ரத்னாயக்க உள்ளிட்ட குழுவின் ஐ.தே.க  யானைச்சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

சாகல யானை சின்னத்தில்  மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடும் அதே வேளை மங்கள சமரவீர தொலை பேசி சின்னத்தில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் எனவே நாம் யாரும் சண்டையிட்டுக்கொள்ளக்கூடாது என்றுகூறியுள்ள அவர்,

இம்முறை மாத்தறை மாவட்டத்தில் சமகி ஜன பலவேகய கட்சியின் மாவட்டத் தலைவராக இருக்கும் மங்கள சமரவீர நேற்று முன்தினம் மாத்தறை மாவட்டத்தில் வேட்பாளர் பட்டியலை தயாரித்துள்ளார் இம்முறை சமகி ஜனபலவேகய கட்சியை ஆரம்பித்து அதன் தலைமைத்துவத்தை சஜித்துக்கு கொடுத்தோம் கட்சியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமித்தோம் எமது எதிர்பார்ப்பு நாட்டை நல்லதொரு நிலைக்கு இட்டு செல்ல வேண்டும் என்பதுதான் எனக் கூறியுள்ளார்.

logo

Apekshakaya

பிந்திய செய்தி