நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 2405 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 646 வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வௌ்ளிக்கிழமை (20) மாலை 6 மணி முதல் இன்று (24) மதியம் 12.00 மணிவரையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் அதிகமானோர் வீதியில் சுற்றித்திரிந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக, ஒன்றுகூடி மது அருந்தியமை, வாகனங்களில் பயணித்தமை, உணவகங்களை திறந்து வைத்திருந்தமை, குடிபோதையில் வீதிகளில் ஒழுங்கீனமாக நடந்துக் கொண்டமை மற்றும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கீழ் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் குறித்த பிரதேச பொலிஸ் நிலையங்களினால் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.

Apekshakaya

பிந்திய செய்தி