கொரோன வைரேஸ் தேசிய அனர்த்தமாக கருதப்படும் இந்த நேரத்தில் அரசாங்கத்தை மட்டும் நம்பி இருக்காது பொது மக்கள் சிவில் அமைப்புகள் அரசியல் கட்சிகள் என எல்லோரையும் இனைத்து வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னனியின் தலைவர் அனுரகுமார திசநாயக தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பின் போதே அனுரகுமார இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி அடைந்த நாடுகல் கூட இந்த கொரோன வைரசுக்கு முகம் கொடுக்க முடியாமல் தள்ளாடுகின்றது இந்தநிலைமை எம் அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் கொரோன வைரேஸ் தொற்றில் இருந்து விடுபட அரசாங்கத்தை மட்டும் நம்பாது நாம் அனைவரும் ஒன்றினைந்து இந்த நிலைமையை வெற்றி கொள்ளவேண்டும்  என்று தெரிவித்துள்ளார்.

 

logo

Apekshakaya

பிந்திய செய்தி