மறு அறிவித்தில் வரை அரச மருந்தகங்கள் தவிர அனைத்து மருந்தகங்களையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடுமாறு பதில் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

எனினும், மருந்தகங்களினால் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், அனைத்து விற்பனை நிலையங்களையும் உடன் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்தியாவசிய உணவு பொருட்களை வீடுகளுக்கு விநியோகிப்பதற்காக நாடு பூராகவும் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், குறித்த விற்பனை நிலையங்களை திறந்து வைத்து நுகர்வோருக்கு பொருட்களை விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

logo

Apekshakaya

பிந்திய செய்தி