கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையின் முதலாவது மரணம்  பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டவர் எனவும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

logo

Apekshakaya

பிந்திய செய்தி