நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த 11 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொழும்பில் 29 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், களுத்துறை மாவட்டத்தில் 17 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 11 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 10 பேரும்

இரத்தினபுரி மாவட்டத்தில் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

மேலும், குருநாகல், காலி, கேகாலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு கொரோனா நோயாளர் வீதம் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 3 வெளிநாட்டு பிரஜைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, சந்தேகத்திற்கிடமான 117 பேர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிந்திய செய்தி