கொரோன வைரஸ் தாக்கம் கட்டுக்கடங்காமல் இறுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அரச இயந்திரம் அதிகூடிய பலனை பெற்றுத்தரும் ஒன்றாக மாற்றப்பட வேண்டும் என சமகி ஜன பலவேகய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சட்டத்துக்கு அமைவாகவும் நீதியானதுமாக இருக்க வேண்டும் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார் நேற்று (30) சமகி ஜன பலவேகய கட்சியின் கோட்டே காரியாலயத்தில் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் நடந்த சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொரோன வைரசுக்கு எதிராக செயற்படுவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என குறிப்பிட்ட அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

சரியான நேரத்தில் விமான நிலையத்தை மூடியிருந்தால் பாதிப்பை தடுத்திருக்கலாம் நாங்கள் எவ்வளவோ சொன்னோம் அரசாங்கம் அதனை பொருட்படுத்தவில்லை அதனால் இப்போது நிலைமை பாரதூரமாகிவிட்டது.

தேர்தலுக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்டார்கள் மக்களின் நலன் கவனத்தில் கொல்லப்படவில்லை. 

இந்த அரசாங்கம் முடிவை மிகவும் தாமதமாய் எடுத்து விட்டது.

எது எப்படி இருப்பினும் இப்போது நாம் அனைவரும் ஒன்றினைந்து அரச இயந்திரம் சிறப்பாக வேளைசெய்ய அழுத்தம் கொடுப்பதுடன் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து கொரோனாவை வெற்றி கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

logo

Apekshakaya

பிந்திய செய்தி