தெரண தொலைக்காட்சியில் 31.03.2020 அன்று"வாதபிட்டிய" சிங்கள நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் 'சத்துர' உங்கள் பகுதியில் தற்போதைய கொரொனா தொடர்பான நிலைப்பாடு என்ன? என்று முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயிடம் வினவியபோது ஒருவர் அக்குரணை பகுதியில் அடையாளம் காணப்பட்டார். மேலும் அவரை விசாரணைக்குட்படுத்தியதில் அவர் சென்று வந்த இடங்கள் சிலவற்றை அடையாளம் கண்டிருக்கிறோம். மேலும் மூன்று பேர் கொரோனா தொற்று காரணமாக அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்கிறது என்று சொல்லிக்கொண்டே....

அந்த பேச்சுக்கு எந்தவித தொடர்பும் இல்லாமல் சட்டென.....

இதுவரை ஒன்பது பேர் அடையாளம் காணப்பட்டவர்கள் இன்று இனம்காணப்பட்ட பத்து பேருடன் சேர்த்து மொத்தம் பத்தொன்பது (19) "முஸ்லிம்கள்" கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று கூரினார்

இதன்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் சத்துர' சட்டென சொல்லிக்கொடுத்து கேட்டது போல குறுக்கிட்டு இந்த இடத்தில் முஸ்லிம்களான ஒரு இனத்தை சாடுவது பிழையான கருத்து இதனால் பல்வேறுபட்ட பிரச்சனைகள் ஏற்கனவே ஏற்பட்டுள்ளது என தெரிவிக்க..

தன்னை சுதாகரித்துக்கொண்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த தடுமாற்றத்துடன் அவரது மொழிநடையில் "ஏகொள்ளு (முஸ்லிம்கள்) விதரக் நெமேய் சத்துர அபே சிங்ஹலாயத் கியனதே அஹன்னே! ஏக விதர நெமே அபே ஆயத் கொடக் கொரோனா ஹெதிலா இன்னவா" (அவர்கள் மட்டுமல்ல சத்துர எங்கட சிங்கள ஆட்களும் சொல்வதை கேட்பதில்லை எங்களுடையவர்களும் நிறையபேர் நோய்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்) என்று மழுப்பியதை காணமுடிந்தது.

ஆகவே இந்த நிகழ்விலிருந்து சில விடயங்களை கேள்விகளாக நாம் நோக்கவேண்டியுள்ளது.

1. இந்த நிகழ்ச்சி ஏற்கனவே பேசி ஒழுங்கு செய்யப்பட்ட ஒன்றா?

2. அரசாங்கம் ஆட்சியை ஸ்திரப்படுத்த இவர்களைப்போன்ற நயவஞ்சகர்களின் மூலம் இனவாதம் பேசி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள திரைமறைவில் நடாத்தப்படும் நாடகமா?

3. எப்போதும் இனவாதம் பேசும் நிகழ்ச்சி தொகுப்பாளர் 'சத்துர மஹிந்தானந்தவின் கருத்தை மறுத்து பேசியதன் மர்மம் என்ன?

4. அல்லது வழமையாகவே ஒரு இனவாத ஊடகமாக வலம் வரும் தெரண தொலைக்காட்சி இனத்துவேசம் இருந்தால் அப்படி மறுத்து பேசுவார்களா? என்று எமக்குள்ளே ஒரு கேள்வியை தொடுக்கக்கூடிய ஒரு தந்திரோபாயமா? இப்படி பல கேள்விகளை தொடுக்கலாம்...

எது எப்படியோ எதிர்காலத்தில் நாவலப்பிட்டி முஸ்லிம் மக்கள் இந்த மஹிந்தானந்த போன்ற "எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகின்ற இன வெறியர்களை அடையாளம் கண்டு தக்க பாடத்தை புகட்ட வேண்டும் என்பதே காலத்தின் தேவையாகும்.

பிந்திய செய்தி