இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்துச்செல்லும்  இவ்வேளையில் மரணிப்பவர்களின் இறுதிக்கிரியைகள் செய்வது தொடர்பாக பேசப்பட்டு வருகின்றது.

கொரோனா வைரஸினால் இலங்கையில் மரணமான இரண்டாவது நபர் முஸ்லிமாவர் அவரின் நல்லடக்கம் இஸ்லாமிய முறைப்படி அல்லாமல் அவரது சடலம் எரிக்கப்பட்டது. இதன்போது முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒருவித கவலையும் கருத்தாடலும் உருவாகியுள்ளது.

அதனடிப்படையில் கொரோனா வைரஸினால் இறக்கும் இஸ்லாமியர்களின் உடல்கலை நல்லடக்கம் செய்வது பற்றி ஆலோசனை நடைபெறுகின்றது. 

விஞ்ஞான ரீதியாக இறந்த உடல்களை நல்லடக்கம் செய்வது பற்றி ஆராயும் கட்சித் தலைவர்களின் விசேட குழுக் கூட்டம் கடந்த 2ம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்திற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களான ரவுப் ஹக்கீம்  ரிசாத் பதியுதீன் முஜிபுர் ரஹ்மான் பைசர் முஸ்தபா அலிசாகிர் மௌலான ஆகியோர் கலந்து கொண்டனர் .

இதன் போது கொரோன வைரஸ் தொற்றால் இறந்து போன முஸ்லிம்களின் உடல்கள்  குடும்ப அங்கத்தவர்கள் சிலருக்கு முன்னால் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான ரீதியாக இதனை பரிசீலனை செய்ய விசேட குழு ஒன்றும் நியமிக்கப்படவுள்ளது.

இந்த யோசனைக்கு பிரதமர் உடன்படுவதாகவும் விரைவாக அந்த குழு நியமிக்கப்பட வேண்டும் என்றும் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய பிரதமர் உறுதி வழங்கியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

குழிகளை கொங்ரீட் இடுவதற்கான ஆலோசனை

இவ்வேளையில் இறந்த உடல்களை நல்லடக்கம் செய்யும் போது குழிகளை கொங்ரீட் இட்டு மறைக்க வேண்டும் என முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும் மதத் தலைவர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனையை அமுல்படுத்துவதற்காக விரைவாக தங்களது கருத்துக்களை  கூறும்படியும் ஆராய்ச்சி செய்யும் அதிகாரம் அந்த குழுக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

logo

Apekshakaya

பிந்திய செய்தி