தேர்தல் திணைக்களத்தின் தலைவர் ஏப்ரல் 01ம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் டி.பி ஜயசுந்தரவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக்கடிதத்தில் பாராளுமன்றத்தை மார்ச் 02 ம் திகதி கலைத்ததிலிருந்து 03 மாதங்களுக்கு பிறகு பாராளுமன்றத்தை கூட்டுவது சம்பந்தமாக ஆராய்ந்து வருவதாக தெரிய வருகின்றது.

தற்போது நாட்டில் இருக்கும் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு பாராளுமன்றத்தை கூட்டுவதா இல்லையா என்று முடிவெடுக்கப்படவுள்ளது.

தற்போது நாடு இரானுவக்கட்டமைப்பை நோக்கி நகர்வதாக சிவில் அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

பாராளுமன்றத்தை கூட்ட முடியாமல் இருப்பது அரசு மிலிடரி ஆட்சியை கொண்டு செல்வதற்கு துணை புரிவதாக அமையும் என சிவில் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவத்தளபதி பாராளுமன்றத்தை கூட்டத்தேவை இல்லை என்று குறிப்பிட்டிருப்பதானது நாடு ராணுவ ஆட்சியின் பக்கம் நகர்வதை காட்டுகின்றது.

அதனால் பாராளுமன்றம் வேண்டாம் என்று விசப்பாம்பு சொல்கிறது.

logo

Apekshakaya

பிந்திய செய்தி