இலங்கை உட்பட முழு உலகமும் covid 19 கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முகம் கொடுத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அரசின் முடிவுகளுக்கு ஏற்ப செயற்படுமாறும் வீட்டில் இருக்குமாறும் வீட்டில் இருப்பவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்வான் எனவும் இதுவே இஸ்லாமியர்களின் நம்பிக்கை எனவும் இலங்கை வகுப் நிர்வாக குழு உறுப்பினரும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை செயற்குழு உறுப்பினருமான மௌலவி எம்.அக்ரம் நூராமித் கூ றியுள்ளார்.

அவரின் இந்த கருத்து சமூக ஊடகங்களில் பதிவாகியுள்ளது.

அன்பார்ந்த முஸ்லிம் சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும்

நிகழ்காலத்தில் covid 19 கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முகம் கொடுத்திருக்கும் இவ்வேளையில் நாம் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு இந்த சவாலை வெற்றி கொள்ள முடியும் என அவர் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம் ஆகையால் அல்லாஹ்வுக்கு தெரியாமல் ஒன்றுமே நடக்காது எல்லாவற்றையும் அவன் பார்த்துக் கொள்வான் என்று அவர்  கருத்து  தெரிவித்துள்ளார்.  

logo

Apekshakaya

பிந்திய செய்தி