சாஜா ஹாய் அல்-சாஜா பிரதேசத்தில் உள்ள கொரோனா நோயினால் இறந்தவர்களின்  உடல்கள் நல்லடக்கம் செய்யப்படவில்லை அவர்களின் உடல்களை வேறொரு பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யும் படி சாஜாவை பரிபாலிக்கும் சுல்தான் முஹம்மது அல் ஹாசிமி உத்தரவிட்டுள்ளதாக அரசின் உத்தியோகபூர்வ அறிக்கையிலிருந்து அறியக்கிடைக்கின்றது.

சாஜாவில் உள்ள இஸ்லாமிய செயற்பாட்டு திணைக்களத்திற்கு சுல்தான் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இலங்கையில் இறந்த முஸ்லிம்களின் உடல்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று முஸ்லிம்களும் முஸ்லிம் தலைவர்களும் கேட்டிருக்கும் இவ்வேலையில் சாஜாவில் சுல்தானின் அறிவிப்பு இப்படி உள்ளது.

இது தொடர்பாக முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தினேஷ் தொடங்கொட அவரது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது சாஜா வில் நடந்திருக்கும் நிலைமை பற்றி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை நாட்டிற்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Apekshakaya

பிந்திய செய்தி