"2020 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் புதிய நாடாளுமன்றத்தை கூட்டுவது " குறித்த தேர்தல் திணைக்களதின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய 2020-03-31 மற்றும் 2020-04-01 ஆகிய திகதிளில் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு ஜனாதிபதின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தரா பதிலளித்துள்ளார்.

இதை ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதின் செயலாளர் எழுதியுள்ள பதில் கடிதத்தின்படி, தேர்தல் ஆணையகத்தின் தலைவர் எழுப்பிய விடயங்கள் தொடர்பாக அரசியலமைப்பின் 129 வது பிரிவின்படி உச்சநீதிமன்றத்தில் ஆஜராக எந்த தேவையும் இல்லை. அரசியலமைப்பின் 24 (3) ஆம் விதிகளின் கீழ், வெளியிடப்பட்ட வர்த்தமானியில் தேர்தல் நடத்தப்படக்கூடிய வேறு திகதியை அறிவிக்குமாறு அவர் தேர்தல் திணைக்கள தலைவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Apekshakaya

பிந்திய செய்தி