பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன் படுத்துகிறார்கள் என எதிர்க்கட்சியினர் குற்றஞ் சாட்டியுள்ளனர். 

ஊடக சந்திப்பு தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக கூறி யூ.என்.பி தேர்தல் திணைக்களத்தலைவருக்கு உத்தியோக பூர்வமாக கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

இந்த அறிவிப்பை ஐக்கிய தேசிய கட்சியின் சட்டச் செயலாளர் ஜனாதிபதி ஆலோசகர் நிசங்க நானயக்கார எழுத்துபூர்வமாக அறிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறியிருந்தாலும் கூட ...

"நாட்டில் ஒரு பயங்கரமான தொற்றுநோய் பரவி வரும் நேரத்தில், அரசியல் வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் நாம் அனைவரும் நாட்டினதும் மக்களின் நலனுக்காக உழைக்க வேண்டும்.

இத்தகைய சூழலில், மக்கள் சார்பாக நிவாரணம் விநியோகிக்கும் வழிமுறை அரசியல்மயமாக்கப்பட்டு அரசாங்கத்தின்  அரசியல் விம்பத்தை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிடுள்ளார்.

தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டிருக்கும் நேரத்தில், எதிர்க்கட்சியில் உள்ள எந்தக் குழுவும் நாட்டின் பேரழிவு சூழ்நிலையை எதிர்கொண்டு தங்கள் அரசியல் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல முடியவில்லை. இருப்பினும், இந்த குழுக்கள் அனைத்தும் நாட்டினதும் மக்களின் நலனுக்காகவும் எங்களால் முடிந்தவற்றை செய்துள்ளோம் .

இந்த சூழலில், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டணிக் கட்சிகளின் சில குழுக்கள் கொரோனா தொற்றுநோயை தங்கள் குறுகிய அரசியல் பிரச்சாரங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள் என அவர் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Apekshakaya

பிந்திய செய்தி