பொதுத் தேர்தல் திகதி தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் 2 ஆம் தேதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படுமானால் சடலங்களுக்கு  நடுவே நின்று ஆட்சி அமைக்க வேண்டி வரும் என எதிர்க்கட்சியினர்  முன்வைத்த குற்றச்சாட்டுகள், அதே போல் தேர்தல் பல மாதங்கள் தாமதமாகிவிட்டால் அவர் தேர்தல்களை நடத்தாமல் சர்வாதிகாரியாக செயல்படுவார் என்ற குற்றச்சாட்டுகளையும் ஜனாதிபதி  கவனத்தில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி சமீபத்தில் தனது ஆலோசகர்களுடன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்ததாகவும், ஜனாதிபதி செயலாளர் தேர்தல் திணைக்கள தலைவருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார், தேர்தல் திணைக்களம் தேர்தல் திகதி குறித்து ஒரு முடிவை வழங்கியுள்ளது.

எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களினால் அரசுக்கு ஆபத்து

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அவரது பொருளாதார ஆலோசகர்களும் தேர்தலை தாமதமின்றி நடத்துமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அடுத்த மாதங்களில் நாட்டில் வெகுஜன எதிர்ப்பின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் உடனடியாக தேர்தலுக்குச் சென்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

தேர்தல் தொடர்பாக சில கட்சிகள் உச்ச நீதிமன்றத்திற்கு செல்வதால் ஏற்படும் ஆபத்து குறித்தும் ராஜபக்ஷ குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையாளர் இரண்டு நிபந்தனைகளை வைத்துள்ளார்!

இதற்கிடையில், theleader.lk க்கு கிடைத்த உறுதிப்படுத்தப்படாத அறிக்கையின் படி தேர்தலுக்கான சமீபத்திய திகதியை அறிவிக்க அரசாங்க அதிகாரிகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து, தேர்தல் திணைக்கள தலைவர் இரண்டு நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.

முதல் நிபந்தனை என்னவென்றால், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் முற்றிலுமாக முடிந்துவிட்டது என்பதற்கும், கொரோனா வைரஸிலிருந்து உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்பதற்கும் சுகாதார அதிகாரிகள் தெளிவான உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

இரண்டாவது நிபந்தனை என்னவென்றால், தேர்தலுக்குத் தேவையான பொது நிர்வாக அதிகாரிகளின் முழு பங்கேற்புக்கான உத்தரவாதம் இருக்க வேண்டும். (உயிருக்கு ஆபத்தானது பற்றி) என்ற நிபந்தனைகளை முன் வைத்துள்ளார்.

Apekshakaya

பிந்திய செய்தி