சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தகவளின் படி, நேற்று (12) புதிதாக ஏழு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

11ம் திகதியிலிருந்து இன்று வரைக்கும் பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளர்களின்  எண்ணிக்கை 11 ஆகும்.

மொத்தம் 56 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வைரஸால் ஏழு பேர் இறந்துள்ளனர்.

147 நோயாளிகள் மருத்துவ மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், புதிய கொரோனா வைரஸால் இன்னும் ஆபத்து இருப்பதாக சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க கூறுகிறார்.

சரியான முடிவுகளை எடுப்பதன் மூலம் இலங்கையில் வைரஸ் பரவுவதைத் தடுக்க முடிந்தது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், ஒவ்வொரு செயலிலும் ஆபத்து இருப்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தினார்..

அரசுக்கு சொந்தமான ஊடகங்கள்:

அதன்படி, கொரோனா முற்றிலுமாக அடக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை சமூகமயமாக்க அரசாங்கத்தின் சில சமூக ஊடகங்கள் ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாக அறியக்கிடக்கின்றது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க அவர்களின் அறிக்கையை மேற்கோள் காட்டி, லங்கா சி நியூஸ் "கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டில்  குறைந்துள்ளது. நாட்டில் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது. ஊரடங்கு உத்தரவு இந்த மாதத்தில் நீங்கிவிடும் என்றும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கழும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

"நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவின் படி இந்த மாதத்தில் நிச்சயமாக குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது" என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க கூறினார்.

ஊரடங்கு உத்தரவுகளை குறைப்பதற்கான உத்திகள் தற்போது விவாதிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும், சாதாரண வாழ்க்கையை கொண்டு செல்வதில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அதிகபட்ச தூரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Apekshakaya

பிந்திய செய்தி