பிரான்சில் பிரபலமான போர்க்கப்பலான சார்லஸ் டீகால் போர்க்கப்பளில் பனி புரியும் தொழிலாளர்கள் 50 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏ ற்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

இப்பொழுது  கப்பல் ஹெலிகாப்டர் மூலமாக தெற்கு பிரான்சின் டூலோனில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 2,000 பேர் பணியாற்றும் இந்த கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் போர்க்கால கண்காணிப்பை முடித்து பிரான்சுக்கு பயணம் செய்கிறது இந்தவேளையிலேயே வைரஸ் தொற்றியுள்ளது இதனால் கப்பலில் உள்ள அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த கப்பல் ஜனவரி 21 ஆம் தேதி பிரான்சுக்கு புறப்பட திட்டமிடப்பட்டு ஏப்ரல் 23 ஆம் தேதி தெற்கு பிரான்சின் டூலோனில் உள்ள கடற்படைத் தளத்திற்குத் திரும்பவிருந்தது, ஆனால் ஏப்ரல் 12 ஆம் தேதி பிரான்சுக்குத் திரும்பிவிட்டது .

porte Avion charles de gaulle

மார்ச் 15 முதல் வெளிப்புற மனித தொடர்பு இல்லாத இந்த கப்பலின் குழுவினர் எவ்வாறு வைரஸுக்குள் நுழைந்தார்கள்? இந்த விவகாரம் குறித்து பரவலான விசாரணை நடந்து வருவதாக பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பிரான்சின் பாதுகாப்பு மந்திரி புளோரன்ஸ் பார்லி, வைரஸ் பாதித்த மூன்று நோயாளிகளும் போர்த்துகீசிய கடற்கரையை கடக்கும் கப்பலில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

261 மீட்டர் நீளமுடைய இந்த கப்பல் அணுசக்தி மூலம் இயங்கும் தொழில்நுட்பத்தை கொண்ட  உலகின் முன்னணி கப்பல்களில் இதுவும் ஒன்றாகும். வேகம்: 50 மைல் அல்லது 27 முடிச்சுகள். இந்த பிரெஞ்சு போர்க்கப்பலில், 40 பொது மற்றும் ரஃபேல் பாணி போர் விமானங்கள், வான்வெளியில் இரண்டு ஹாவோர்க்ஸ் வகை விமானங்கள், இரண்டு மல்டி ரோல் இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு டாஃபின் வகை யூரோகாப்டர் மற்றும் பலவிதமான ஏவுகணைகழும் உள்ளன.

logo

Apekshakaya

பிந்திய செய்தி