கொரோனா தொற்று  நோயால் இறக்கும் மக்களின் உடல்களை தகனம் செய்வதற்கான சுகாதார அமைச்சின் முடிவை மீள் மறுபரிசீலனை செய்வதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது

சுகாதார அமைச்சு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சில் இடம் பெற்ற சந்திப்பின் போது  மருத்துவர்கள் மற்றும் அடக்கம் செய்ய முன்மொழியப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் இடையே மூன்று மணி நேரம் கலந்துரையாடப்பட்டது.

கொரோனா தொற்றினால் மரணிக்கும் உடல்கள் குறித்து பரிந்துரைகளை வழங்கிய மருத்துவர்கள் மற்றும் தடயவியல் மருத்துவர்கள் உட்பட ஒரு குழுவும், அரசு மருத்துவர்கள் உட்பட நிபுணர்களின் மற்றொரு குழுவும் கலந்துரையாடலில் பங்கேற்றன.

பேராசிரியர் ரிஸ்வி ஷெரிப், பேராசிரியர் ஷெரிஃப்டீன், பேராசிரியர் ஹனிபா, பேராசிரியர் பெர்னாண்டோ, பேராசிரியர் ஏகநாயக்க, ஆசாத் அலி மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் இலியாஸ், ரசிக் ஸரூக், மற்றும் டாக்டர் ரிஸ்வி ஷெரிப் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கும் சடலங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய கொரோனா நோயாளிகளின் சடலங்களை அடக்கம் செய்ய அரசாங்கம் எடுத்த முடிவின் அடிப்படையில் டாக்டர் பதிரன உள்ளிட்ட நிபுணர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 வைரஸ் ஒரு புதிய வைரஸ் என்றும், அதன் செயற்பாடுகள் குறித்த எந்த பரிந்துரைகளும் பாதுகாப்பு நடவடிக்கையாக வெளியிடப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பு மற்றும் 182 நாடுகளின் நிலைப்பாடு:

'All is well': Triage and lies await Italy's critical coronavirus patients  ...

எவ்வாறாயினும், இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த அரசு சாரா நிபுணர்களின் குழு, உயிரற்ற ஊடகங்களில் பாக்டீரியா பரவக்கூடும் என்றாலும், வைரஸ் பரவ முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இது உலக சுகாதார அமைப்பு மற்றும் 182 நாடுகளின் நிலைப்பாடு என்றும் குழு சுட்டிக்காட்டியது.

இந்த முடிவு முஸ்லிம் சமூகத்தின் மத மற்றும் கலாச்சார உணர்வுகளுக்கு இடம் கொடுக்கவில்லை என்பதைக் சுட்டிக் காட்டிய அரசு சாரா நிபுணர் குழு அறிவியல் மற்றும் சமூக அம்சங்களை கவனத்தில் எடுப்போமானால் கொரோனா தொற்றால் இறந்த உடல்களை அடக்கம் செய்வதில் எந்தத் தீங்கும் இல்லை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கக்கூடிய மற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் கொரோனாவாள் இறந்த உடல்களை அடக்கம் செய்ய அரசாங்க தரப்பைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு ஒப்புக் கொண்டுள்ளது.

இருப்பினும், டாக்டர் சன்னா பெரேரா பலமுறை கொரோனாவால் இறந்த  உடல்கள் பயங்கரவாதிகளால் உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.

Apekshakaya

பிந்திய செய்தி