இலங்கையில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் தேர்தலை நடத்த வேண்டாம் என்று கார்டினல் மல்கம் ரஞ்சித் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (16) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

"இன்று காலை நிலவரப்படி, நாடு முழுவதும் 238 கொவிட் நோயாளிகளும் ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தல் முகாம்களிலும்  உள்ளனர். நிலைமையை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது மிகவும் தெளிவாக உள்ளது.

புதிய நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை நிறுத்தப்பட்டு, நீண்ட காலமாக புதிய நோயாளிகள் இல்லை என்றால், "இப்போது நிலைமை நன்றாக உள்ளது, எங்களுக்கு நல்ல கட்டுப்பாடு உள்ளது" என்று சொல்லலாம். எனவே, இந்த நேரத்தில் எங்களுக்கு தேர்தல் வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, ”என்று அவர் கூறினார்.

கார்டினல் மல்கம் ரஞ்சித் (The morning) தி மார்னிங் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலிருந்து...

logo

Apekshakaya

பிந்திய செய்தி