கொரோனா தொற்று ஏற்பட்ட முதல் நோயாளி முதல் அனைத்து  நோயாளிகளுக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வரை  நாட்டின் பொருளாதாரம் சம்பந்தமான எந்த தீர்மானகரமான முடிவையும் எடுக்க வேண்டாம் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)  தெரிவித்துள்ளது.

The morning  செய்தித்தாளுக்கு வழங்கிய நேர்காணலிலே அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கதின் செயலாளர் வைத்தியர் நவீன் டி  சில்வா இந்த நேரத்தில் நாட்டின் பொருளாதாரத்திற்கு உயிர் கொடுக்க நினைக்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்

The morning  பத்திரிகை தலைப்புச் செய்தியில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது

நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை மறுசீரமைக்க  முதல் தற்போதுள்ள நிலைமையை  சோதித்துப்பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடு தழுவிய நிலைமையை எவ்வாறு மதிப்பிடுவது என்பது குறித்து வைத்தியர் நவீன் டி சொய்சா சுட்டிக்காட்டியுள்ளார், கொரோனாவை "நோயாளியுடனான முதல் தொடர்பு வைத்திருந்தவர்களை முதலில் சோதிக்க வேண்டும்." இரண்டாம் நபரையும் சோதிக்க வேண்டும் இவ்வாறு தொடராக அவர்கள் சோதனைக்கு  உட்படுத்தப்பட்டார்களா என்ற கேள்வி எழும்புகிறது.

நேற்று முன்தினம் (15) நடந்த கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, அனைத்து மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கும்  , நாட்டில் வணிகம், வேளாண்மை துறையை மீண்டும் தொடங்குவது பொருத்தமானதா என்பது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மூலம் தங்கள் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு பணித்தார்.

மாகாண மட்டத்தில் பொருத்தமான சுகாதாரத் துறை பரிந்துரைகள் இல்லாமல் முடிவெடுக்க மாட்டேன் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

  

Apekshakaya

பிந்திய செய்தி