1200 x 80 DMirror

 
 

கொரோனா வைரஸ்:பிரிட்டனில் 16,000-ஐ கடந்த உயிரிழப்பு பிரிட்டனில் கொரோனாவைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16ஆயிரத்தை கடந்துள்ளது.

பிரிட்டனில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவது குறித்து சரியான முடிவு மேற்கொள்ளப்படும் என பிரிட்டன் அமைச்சர் மைக்கேல் கோவ் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் இருந்து வரவிருக்கும் 84டன் மருத்துவ பாதுகாப்பு கவசங்கள் பிரிட்டன் வந்து சேர காலதாமதம் ஆகிறது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிரிட்டனின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஒருநாள் ஊதியத்தில்29 பவுண்டுகள் கூடுதலாக வழங்கவேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஷாப்பிங் செய்ய அனுமதிக்கும் இரான்

இரானில் உள்ள சில வர்த்தக நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்கள் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளன. அங்கு ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

இரானில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் 5,000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், பலி எண்ணிக்கை 5000-ஐ கடந்து இருக்கும் என கூறப்படுகிறது.

இஸ்ரேலில் வணிக வளாகங்கள் தவிர வேறு சில கடைகளும் இயங்கத் துவங்கியுள்ளன.

போலந்தில் படிப்படியாக ஊரடங்கு நிலை தளர்த்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில வர்த்தகங்கள் இயங்குவதற்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடான ஜெர்மனியில் கார் விநியோகஸ்தர்கள்தங்கள் பணிகளை மீண்டும் துவங்குகின்றனர். இரு சக்கர வாகன வர்த்தகமும் துவங்கியது.

11 மில்லியன் மக்களுக்கு 60 வெண்டிலேட்டர்கள் மட்டுமே வைத்திருக்கும் நாடு

அமெரிக்காவிலேயே கொரோனா வைரஸால் மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஹெய்ட்டியும் ஒன்று.11 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட ஹெய்ட்டியில் கொரோனா வைரஸ் பரவினால் பேராபத்து ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.

11 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட ஹெய்ட்டியில்60 வென்டிலேட்டர்கள் மட்டுமே உள்ளது. 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், அங்குள்ள மருத்துவமனைகளில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயேதீவிர சிகிச்சை பிரிவுகள் உள்ளன.

''இங்குள்ள சுமார் 40 வென்டிலேட்டர்களில் கிட்டத்தட்ட20 வேலை செய்யாது, உண்மையில் 40 மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில் உள்ளது'' என்றுஹெய்ட்டியில் உள்ள சுவாசப் பிரச்சனை சிகிச்சை நிபுணர் ஸ்டீஃபன் ட்ராகன் கூறுகிறார்.

 ஹெய்ட்டியில் ஏற்கனவே கொரோனாவிற்கு மூன்று பேர் பலியாகியுள்ளனர். 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, தொலைத்தூர பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளின் எண்ணிக்கை முறையாக அரசின் அதிகாரபூர்வ எண்ணிக்கையில் வருவதில்லை.

 “வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது” : ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்யாவில் மில்லியன்கணக்கானோர் ஈஸ்டர் பண்டிகையைகொண்டாடிவருகின்றனர். கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளதால், தொலைக்காட்சிகளிலும், இணையதளங்களிலும் பிரார்த்தனைகள் ஒளிபரப்பப்பட்டன.

மாஸ்கோவில் மக்கள் கூட்டமின்றி பிரார்த்தனை நடத்தப்பட்டது.

வழக்கமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஈஸ்டர் தின பிரார்த்தனை கூட்டத்தில் மூத்த பாதிரியருடன் கலந்துகொள்வார். மாறாக, இந்த முறை காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில்,அனைத்து விஷயங்களும் கட்டுக்குள்கொண்டுவரப்பட்டுள்ளதாகபொதுமக்களிடம் உறுதியளித்தார்.

ஆனால்,ரஷ்யாவில்புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவரை ரஷ்யாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,000 ஆக உள்ளது.

1 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் அதிகமாகவும் வேகமாகவும் கொரோனா வைரஸ் பரவிவருகிறது. மாஸ்க்கோவிலும் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 500-ஐ கடந்த கொரோனா மரணங்கள்

இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 15,712 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 507 பேர் உயிரிழந்துள்ளனர்; 2231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று இந்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமையை விட, இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை 27 அதிகரித்துள்ளது.

ரமலான் நோன்பு அவசியமில்லை : அயதுல்லாஹ் காமேனி

ரமலான் நாட்களில் தொழுகைக்காக யாரும் கூட வேண்டாம் என செளதி அரேபியாவில் உள்ள பல மத குருக்கள் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு மேலும் அதிகமாக பரவக்கூடாது என்பதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள சன்னி முஸ்லிம்கள் தங்களின் மசூதிகளை மூடியுள்ளனர். உலகின் மிக பெரிய மசூதியான செளதி அரேபியாவின் மெக்காவும் மூடப்பட்டுள்ளது.

இந்த முறை முஸ்லிம்கள் ரமலான் நோன்பு மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை, தொற்று பரவும் இந்த நேரத்தில் நோன்பு இருப்பது உடல் நலத்திற்கு அச்சுறுத்தலாக அமையலாம் என இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லாஹ் காமேனியும் கூறியுள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் ஒருவருக்கு கொரோனா

சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவரோடு தொடர்பில் இருந்த பிற பத்திரிகையாளர்களுக்கு சோதனை செய்யப்பட்டுவருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.

பத்திரிகையாளர் ஒருவருக்கு ஆர்டிபிசிஆர்(RTPCR - REAL TIME PCR) என்ற சோதனை முறை மேற்கொள்ளப்பட்டது என்றும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என அமைச்சர் தெரிவித்தார். ''ஒரு பத்திரிகையாளருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.அவரோடு பணியில் இருந்த, அவருடன் தங்கியிருந்த மற்றவர்களுக்கு ரேபிட்டெஸ்ட்கிட் மூலம் சோதனை செய்யப்படுகிறது.அவரோடு செய்தி சேகரிப்பில் இருந்த நபர்களை அடையாளம் கண்டு அனைவருக்கும் ரேப்பிட் டெஸ்ட் கிட் மூலம் சோதனை செய்துவருகிறோம். பத்து நபர்களுக்கு தற்போது சோதனைசெய்யப்படுகிறது,'' என அமைச்சர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,372ஆக உயர்ந்துள்ளது. நேற்று(ஏப்ரல் 18)வரை புதிதாக 49 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் 82 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்முன்னர் தெரிவித்தார்.

சீனாவுக்கு மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பியதா பிரிட்டன்

கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க கிடைத்த பல வாய்ப்புகளை இங்கிலாந்து அரசு பயன்படுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சுகாதார நெருக்கடி நிலையில் பல அவரச கூட்டங்களை கூட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தவறவிட்டார் என சண்டே டைம்சில் செய்தி வெளியாகியுள்ளது.

அரசாங்கம் தொற்றை எதிர்கொள்ள தயார்நிலையில் இல்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இங்கிலாந்து 266,000 மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை சீனாவுக்கு அனுப்பியது என்று சண்டே டைம்ஸில் பிரசுரமாகி உள்ள கட்டுரை தொடர்பாக, ஸ்கை பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் , “அந்த கட்டுரையில் பல விஷயங்கள் தவறு,” என்றார். ஆனால், எந்த விஷயம் தவறு என்பதை சொல்ல மறுக்கிறார்.

கொரோனா வைரஸ்: உலகத்தையே உருக வைத்த ஒரு காதல் கதை

காதல் எனப்படுவது யாதெனில்? - இவர்களின் கதையைக் கேளுங்கள். உயிரே போனாலும் உன்னை விலக மாட்டேன் பேரன்பே - உலகத்தையே உருக வைத்த ஒரு காதல் கதை.

கொரோனா வைரஸ்: உலகத்தையே உருக வைத்த ஒரு காதல் கதை Corona Love Storyகொரோனா வைரஸ்: உலகத்தையே உருக வைத்த ஒரு காதல் கதை

 “டெல்லியில் நோய் அறிகுறியே இல்லாத 186 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி”

“டெல்லியில் மக்களின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிசெய்ய முடிவெடுத்துள்ளோம். முடக்க நிலை அமலில் இருக்கும் வரை கட்டுப்பாடுகளில் எவ்வித தளர்வும் இருக்காது” என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்து அதிகபட்சமாக டெல்லியில் இதுவரை 1,893 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. “டெல்லியில் நேற்று கோவிட்-19 நோய்த்தொற்று உறுதியான 186 பேரும் கொரோனா வைரஸூக்கான அறிகுறியே தென்படாதவர்கள். இது மிகவும் கவலைக்குரியது. டெல்லியில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இருப்பினும், இன்னும் கட்டுக்குள்தான் இருக்கிறது என்பதால் மக்கள் அச்சமடைய தேவையில்லை” என்று கேஜ்ரிவால் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

'இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்'

இந்தியாவில் அத்தியாவசியமற்ற பொருட்களை இணையம் வாயிலாக விற்பனை செய்வதற்கு இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முடக்க நிலை முடியும் வரை தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக இந்தியாவில் இரண்டாவது கட்டமாக வரும் மே மாதம் 3ஆம் தேதி வரை முடக்க நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை (ஏப்ரல் 20) முதல் சில குறிப்பிட்ட வணிக செயல்பாடுகளுக்கு அனுமதியளிப்பதாக சென்ற வாரம் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதில், இணையதள வர்த்தக நிறுவனங்கள் வழக்கம்போல் அனைத்து வகையான பொருட்களையும் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், முடக்க நிலை முடியும் வரை இணையதள வர்த்தக நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸை கண்டுபிடித்த பெண்

கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு இடையில், நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்ந்து அதிகரித்து வருவதாக தேசிய மகளிர் ஆணையம் (என்சிடபிள்யு) தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பிப்ரவரி 27 முதல் மாா்ச் 22 வரை பெண்கள் தொடா்புடைய 396 குற்றங்கள் குறித்து தேசிய மகளிா் ஆணையத்திற்கு புகாா் செய்யப்பட்டுள்ளன. மாா்ச் 23 முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை இதுபோன்று 587 புகாா்கள் வரப்பெற்றன.

குடும்ப வன்முறை தொடா்பாக கடந்த 25 நாள்களில் 239 புகாா்கள் ஆணையத்திற்கு வந்துள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோபோ வடிவில் வரவிருக்கும் ஒரு பேரபாயம்

உலகமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரப் போராடிக் கொண்டிருக்க, இதையெல்லாம் சமாளித்துவிடலாம் எதிர்காலத்தில் ரோபோ வடிவில் வரவிருக்கும் பேராபத்தைத்தான் நம்மால் சமாளிக்க முடியாது என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்.

பணியிடங்களில் மனித ஆற்றலை ரோபோக்கள் பதிலீடு செய்வதை கொரோனா வேகப்படுத்தி இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கொரோனா வைரஸ்: சென்னை முதல் திருநெல்வேலி வரை - தமிழகத்தில் நடப்பது என்ன?

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு சமைத்த உணவு, மளிகை மற்றும் மருந்துப் பொருட்களை வழங்கும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் 48 மணி நேரத்திற்கு முன்னதாக மாநகராட்சி அலுவலர்களிடம் தகவல் தெரிவித்த பின் வழங்க வேண்டும் என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஊரடங்கால் வேலை வாய்ப்பின்றி உள்ள தொழிலார்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றன. அவ்வாறு உதவிகள் வழங்கும் போது, 48 மணிநேரத்திற்கு முன்னதாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தகவல் கொடுக்கவேண்டும். கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் முகமூடி, கையுறை மற்றும் சமூக இடைவெளியுடன் வழங்குவது அவசியமாகிறது. எனவே உணவுப் பொருட்களை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றவேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 தொற்றிலிருந்து முழுமையாக குணமாக எவ்வளவு காலம் ஆகும்?

கொரோனா

2019ஆம் ஆண்டு இறுதியில் கோவிட் 19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உருவானது. ஆனால், இதனால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் இதிலிருந்து குணமாக நீண்ட காலம் ஆகும் என்றே தெரிகிறது.

சரி. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமாக எவ்வளவு நாளாகும்?

அது அந்தந்த நபரின் உடல்நிலையை பொறுத்தது. கொரோனா தொற்றால் நீங்கள் எந்தளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை பொறுத்தே அதிலிருந்து குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்பதைக் கூறமுடியும்.

சிலர் இந்த நோயிலிருந்து விரைவில் மீண்டுவிடுவார்கள். மற்ற சிலருக்கு இது நீண்டகால பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு எதிராக உலகம் முழுவதும் போராடி வரும் மருத்துவ பணியாளர்களை போற்றும் வகையில் உலக நாடுகளை சேர்ந்த 100க்கும் அதிகமான பிரபல கலைஞர்கள் தொடர்ந்து எட்டு மணிநேரம் இணையம் வாயிலாக தத்தமது இல்லங்களில் இருந்தவாறே நேரலையில் இசை கச்சேரி நடத்தினர்.

ஸ்பெயினில் குழந்தைகள் வெளியே செல்ல அனுமதி

கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் முடக்க நிலையின் காரணமாக கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் வீட்டுக்குள்ளேயே அடைபட்டிருக்கும் குழந்தைகளை வெளியே செல்ல அனுமதிக்கும் முடிவை அந்த நாட்டு பிரதமர் வெளியிட்டுள்ளார்.

கோவிட்-19 நோய்த்தொற்றால் இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ள ஸ்பெயினில் கடந்த மாதம் முடக்க நிலை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதையடுத்து, ஒரு மாதகாலத்துக்கும் மேலாக வீடுகளுக்குள்ளேயே அடைபட்டிருக்கும் குழந்தைகளை வெளியே செல்ல அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கை அந்த நாடு முழுவதும் எழுந்தது.

இதையடுத்து, வரும் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் 12 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு வெளியே செல்ல கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிப்பது தொடர்பாக திட்டம் தீட்டப்பட்டு வருவதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சேஸ் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒரே நாளில் 2,154 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று

இந்தியாவில் நேற்று (சனிக்கிழமை) ஒரே நாளில் 2,154 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து இந்தியாவில் ஒரே நாளில் ஏற்பட்டுள்ள அதிகபட்ச நோய்த்தொற்று எண்ணிக்கை இதுவே ஆகும்.

நேற்றிரவு 9 மணி வரையிலான தரவின்படி, இந்தியாவில் இதுவரை 3,54,969 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 16,365 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், கொரோனா வைரஸ் குறித்த இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் எண்ணிக்கையும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) எண்ணிக்கையும் வேறுபடுகிறது.

தமிழகத்தில் 144 தடை உத்தரவுகட்டுப்பாடுகள் நீடிக்கும்

கொரோனா பரவலை தடுக்க கொண்டுவந்த 144 தடை உத்தரவு ஏப்ரல் 20ம் தேதி தளர்த்தப்படும் என்றும் குறிப்பிட்ட ஆலைகள் இயங்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் ஆணைகள் வெளியிடும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு ஆலை தொழிலாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பால் முடக்கப்பட்ட பகுதிகளில் மட்டும்தான் மே 3ம் தேதி வரை 144 தடை உத்தரவு முழுமையாக கடைப்பிடிக்கப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடுகளை தளர்த்தி எந்தெந்த நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கலாம் என முடிவு செய்ய தமிழக அரசு ஒரு வல்லுநர் குழுவை உருவாக்கியுள்ளது. அந்த குழு நாளை (ஏப்ரல் 20) ஆலோசனைகளை முதல்வரிடம் முன் வைக்கவுள்ளது. இந்த ஆலோசனைகளை கருதில் கொண்டு, முதல்வர் புதிய அறிவிப்புகளை முடிவுசெய்வார் என தமிழக அரசின் செய்திக்குறிப்பு கூறுகிறது.

புதிய அறிவிப்பு மீண்டும் வெளியிடப்படும் என்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்றாலும், பாதுகாப்பு கருதி இந்த அறிவிப்பு வந்துள்ளது என்பதால் ஏற்றுக்கொள்ளலாம் என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

''பல ஆலைகளில் முன் தயாரிப்பு பணிகளுக்கு நேரம் தேவை என்பதால் ஆலைகள் உடனே செயல்படாது. கட்டிட தொழிலாளர்கள் வேலை செய்ய, மூலப்பொருட்கள் பல ஊர்களில் இருந்து வந்துசேர வேண்டும் என்பதால் உடனே வேலைகளை தொடங்க முடியாது. இதனால் வல்லுநர் குழுவின் மூலம் முடிவு எடுக்கப்படும் என்பது சரிதான். அதேநேரம், சமூக நல குழுக்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கி யோசனைகளை கேட்டால், கொரோனாவை முழுமையாக வெல்ல நல்ல முடிவுகளை எடுக்கலாம்,'' என்று அவர் கூறுகிறார்.

BBC

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி