பிரதமரின் அலுவலகம் பிரதமரின் வதிவிடம் ,மற்றும் தங்கல்லயில் உள்ள கார்ல்டன் இல்லம் ஆகிய இடங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள கடற்படை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கடற்படையினர் பிரதமருக்கு மட்டுமல்ல, பிரதமரின் மனைவி  மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் சேவை செய்ய அமர்த்தப்பட்டுள்ளனர்.

வெலிசர கடற்படை முகாமில் 60 க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பரிசோதனையில் தெறிய வந்துள்ளது.

ஏறக்குறைய 4,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் மற்றும் வெலிசர முகாமிலிருந்து வெளியேறிய பலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. விடுமுறையில் சென்றவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

logo

Apekshakaya

பிந்திய செய்தி