இலங்கையில் வர வர மோசமடைந்துவரும் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 25), கதிர்காம மகா தேவலாயம் உள்ளிட்ட பிற கோவில்களுக்குச் சென்று கடவுளிடம் உதவி கோரியுள்ளார்.

கதிர்காம தேவாலயத்தில் உள்ள புனித போதி மரத்திற்கும் ஜனாதிபதி மரியாதை செலுத்தினார்.

வரலாற்று சிறப்புமிக்க ருஹுனு மகா கதிர்காம தேவாலயத்தில் இரவு முழுவதும் பிரித் ஓதும் விழாவிலும் ஜனாதிபதி பங்கேற்றார்.

நாட்டுமக்களின் நலனுக்காக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ அவர்களின் பங்களிப்புடன் வரலாற்று சிறப்புமிக்க ருஹுனு மகா கதிர்காம தேவாலயத்தில் இரவு முழுவதும் பிரித் ஓதும் விழாவிலும் ஜனாதிபதி பங்கேற்றார்.

பின்னர் கதிர்காம ஸ்ரீ அபினவராம விஹாரயாவுக்கு விஜயம் செய்தார்

கபுகம சரணதிஸ்ஸ தேரரையும் சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றார். புனித மைதானத்தில் இரவு முழுவதும் பிரித் வைபவம் இடம்பெற்றது

மக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ அவர்களின் பங்களிப்புடன் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம புனித மைதானத்தில் இரவு முழுவதும் பிரித் ஓதும் வைபவம் நடைபெற்றது.

கொரோனா தடுப்புக்கான மத ஆலோசகர்கள்

மகா சங்கத்தை உள்ளடக்கிய ஆலோசனைக் குழுவையும் ஜனாதிபதி நியமித்துள்ளார்.

ஏப்ரல் 24 அன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ஒரு கூட்டம் நடத்தினார்.

மக்களுக்கு ஒரு பெரிய ஆணையை வழங்குவதாகவும், 60 லட்சம் மக்கள் வழங்கிய அபிலாஷைகளை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி மகா சங்கத்தினருக்கு உறுதியளித்தார்

தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 523 ஆக அதிகரிக்கிறது

மேலும் பதினெட்டு கொரோனா தொற்றாளர்கள் நேற்று (26) இரவு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று (26) 63 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோய்த்தொற்று இதுவாகும்.

சிகிச்சையிலிருந்து மீண்டு வந்த நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 120 ஆகும்.

இதற்கிடையில், 396 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக ஏழு பேர் இறந்துள்ளனர்.

பிந்திய செய்தி