பாதுகாப்புப் படையினரால் பாடசாலைகளை தனிமைப்படுத்தும் மையங்களாக பயன்படுத்துவது குறித்து முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

அகில விராஜ் காரியவாசம் அவரது பேஸ்புக் கணக்கில் பாடசாலைகளை தனிமைப்படுத்தும் மையங்களாக பயன்படுத்துவதாகக் கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு ராஜகிரிய வித்தியாலயம் , டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி மற்றும் தேஸ்டன் கல்லூரி ஆகியவை ஏற்கனவே தனிமைப்படுத்தும் மையங்களாக பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம். நீங்கள் பாடசாலை தொடங்கும்போது, ​​ கொழும்பு ராஜகிரிய வித்தியாலயத்தை எடுத்துக் கொண்டால் தினமும் ஏழு அல்லது எட்டாயிரம் மாணவர்கள் வருவார்கள். இந்த நேரத்தில் மாணவர்கள் இல்லாவிட்டாலும், காவலர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் ஆபத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Apekshakaya

பிந்திய செய்தி