கடந்த சில ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது, மேலும் கொரோனா தொற்றுநோயால் நாடு பாதிக்கப்பட்டுள்ளது

பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவது மிகவும் கடினம் என்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன.

நேற்றிரவு ஒளிபரப்பப்பட்ட நெத் எஃப்.எம் அன்லிமிடெட் நிகழ்சியில் பங்கேற்று அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார நன்மைகளை அடைவதற்கு ஆசிய நாடுகள் பொதுவான நாணயத்தை உருவாக்குவது பொருத்தமானது என்று அமைச்சர் குணவர்தன சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீள்கட்டமைக்க சீனா தயாராக உள்ளது

LS China

இதற்கிடையில், இலங்கைக்கான சீன தூதுவர் ஹு வீ நேற்று மாலை ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து இலங்கையின் பொருளாதாரத்தை மீள்கட்டமைக்க சீனா தயாராக இருப்பதாக அறிவித்தார்.

கொவிட் -19 தொற்றுநோய் உலகப் பொருளாதாரம் மற்றும் இலங்கை பொருளாதாரம் ஆகியவற்றில் பேரழிவு விளைவை ஏற்படுத்தியுள்ளது, அந்நிய செலாவணி வருமானத்தில் பெரும் வீழ்ச்சி ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது என்று ஜனாதிபதி ராஜபக்ஷ சீனாவுக்கான தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்தி