ஜூன் 20 ம் திகதி தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு எடுத்த முடிவுக்கு எதிர்ப்புபிரபல அரசியல்வாதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மைத்ரீ குணரத்னவின் மகன் , சரித்த மைத்ரி குணரத்ன உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை (SC/FR/89/2020) தாக்கல் செய்துள்ளார்.

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் இளைஞர் பிரிவின் தலைவரான வழக்கறிஞர் மைத்ரி குணரத்ன கொழும்பு நகர சபை உறுப்பினராக உள்ளார்.

மனுவில் பிரதி வாதிகளாக தேர்தல் ஆணைக்குழு , அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய,என்.ஜே.அபேசிங்க, ரத்னஜீவன் எச். ஹூல், ஜனாதிபதி செயலாளர் பி பி ஜயசுந்தர சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

2020 ஜூன் 20 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தல்கள் அரசியலமைப்பின் 12 (1) மற்றும் 14 வது பிரிவின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ள தனது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகவும் / அல்லது மீறியதாகவும் மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், 2020 ஜூன் 20 அன்று நடைபெறவிருக்கும் தேர்தல், பொதுக் கொள்கையின் சரியான கொள்கைகளையும், அரசியலமைப்பின் 27 வது பிரிவினால் பாதுகாக்கப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளையும் மீறியுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

Apekshakaya

பிந்திய செய்தி