கொரோனா பேரழிவைத் தோற்கடிக்கவும் இருக்கின்ற நிலைமை குறித்து கலந்துரையாடி அரசியலமைப்பு சட்டத்தின் படி மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்காகவும் முடிவெடுக்கப்படவுள்ளது.

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 225 முன்னாள் எம்.பி.க்களின் சந்திப்பு இடம்பெறவிருக்கின்றது, குறிப்பாக ஜே.வி.பி மற்றும் பலரும் இந்த பேரழிவைச் சமாளிக்க ஒரு பொதுவான வழிமுறையை கோரியுள்ளனர். மே 4 ம் திகதி நடக்கவிருக்கும் கூட்டத்தில் கலந்து கொல்வதில்லை என ஜே.வி.பி யின் தலைவர் அனுர குமார திசாநாயக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

கொரோனா  தொற்றுநோய் நிலைமையை சமாளிக்கவும் தற்போது எழுந்திருக்கும் சட்டப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ளவும் எதிர்க்கட்சிகளிடமிருந்து நிவாரணம் பெறும் நோக்கில் 225 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் திங்கட்கிழமை (மே 04) அலரி  மாளிகையில் கூட்டுவதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ முடிவு செய்துள்ளார்.

Theleader.lk க்கு கிடைத்த  தகவல்களின்படி, பிரதமரின் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டு அலரி மாளிகைக்கு  செல்லும், ஆனால் ஐக்கியதேசியகட்சி. மற்றும் சமகி ஜன பலவேகய இன்னும் ஒரு முடிவையும் எடுக்கவில்லை.

இருப்பினும், கலந்துரையாடலில் பங்கேற்கக் கூடாது என்று இரு கட்சிகளின் தலைவர்களான ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு கட்சி உறுப்பினர்களால் கடுமையாக அழுத்தம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்  தகவல்கள் கூறுகின்றன.

பிரதமரின் அழைப்பை ஏற்று அந்தக் கூட்டத்தில்பங்கேற்குமாறு ஐ.தே.க பலமான இருவர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், எங்களுக்கு கிடைத்த அதிகாரபூர்வமற்ற தகவல்களின்படி, பிரதமரின் பேச்சுவார்த்தைகளை சஜித்தின் கூட்டணி புறக்கணிக்க வாய்ப்புள்ளது.

logo

Apekshakaya

பிந்திய செய்தி