கொவிட் 19 வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 797 ஆக உயர்ந்துள்ளது.நேற்று (06) கொவிட் 19 வைரஸ் தொற்றாலர்கள் 29 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 29 பேரில் 24 பேர் கடற்படை வீரர்கள் என்று சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

ஐந்து நோயாளிகளில், ஒருவர் யாழ்ப்பாணத்தின் பாலாலியில் உள்ள தனிமைப்படுத்தும் மையத்தைச் சேர்ந்தவர்.

பாதிக்கப்பட்ட நான்கு பேரும் கடற்படையினரின் உறவினர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அதில் ஏழு வயது குழந்தையும் இருந்ததாக சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இதற்கிடையில், வருகின்ற திங்கட்கிழமைக்குள் நாடு சுமுகமாக நிலைக்கு வந்துவிடும்  என்றும் இந்த முக்கியமான நாட்களில் பொறுமையாக இருக்குமாறும் ராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறுகிறார்.

கொரோனா வைரசின் ஆபத்து ஓரளவிற்கு குறைந்துவிட்டாலும், கொழும்பில் உள்ள மோதர பகுதியில் இறந்த பெண்னுடன் நெருங்கிப் பலகியவர்களுக்கு பிரச்சினை உள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

logo

Apekshakaya

பிந்திய செய்தி