கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டபோது இரட்டை குடிமகனாக இருந்துள்ளார் என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்

இலங்கை அரசியலமைப்பை ஜனாதிபதி தொடர்ந்து அவமதிப்பது தெளிவாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

"இரட்டை குடிமகனாக, அரசியலமைப்பை மீறி கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது இலங்கையின் அரசியலமைப்பு மீதான அவரது தொடர்ச்சியான அவமதிப்பை நிரூபிக்கிறது. ”

WhatsApp Image 2020 05 09 at 5.07.03 PM

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று (மே 09) இந்த டுவிட்டர் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அதிபர் கோதாபய ராஜபக்ஷ தொடர்ந்து அமெரிக்க பிரஜையாக  இருந்துள்ளார்

அமெரிக்காவின் சமீபத்திய உத்தியோகபூர்வ அறிக்கையின் படி அவர் அமெரிக்க ஒரு குடிமகன் அல்ல என்று தெறிய வந்துள்ளது.

அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவை மே 5 ம் திகதி வெளியிட்ட அறிக்கையில் கோத்தாபய நந்தசேன ராஜபக்ஷவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது, இது அமெரிக்க குடியுரிமையை கைவிட்ட நபர்களின் பெயர் பட்டியலாகும்.

கோத்தாபய ராஜபக்ஷ சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளராக ஆகஸ்ட் 11, 2019 அன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Image 2020 05 08 at 8.00.29 PM

Apekshakaya

பிந்திய செய்தி