கொவிட் -19 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சீனா மற்றும் ஐரோப்பாவிற்கு அப்பால் பரவத் தொடங்கியது இதுவரையிலான பொதுவான ஏற்றுக்கொள்ளல் இதுதான்.

கடந்த வாரம், பிரெஞ்சு மருத்துவர்கள் குழு டிசம்பர் இறுதிக்குள் பாரிஸில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாகக் கூறியது.

அதாவது, பிரான்ஸ் நாட்டை மூடுவதற்கு இரண்டரை மாதங்களுக்கு முன்பு.

பாரிஸின் புறநகரில் வசிக்கும் 43 வயதான அமிரூச் ஹம்மர், ஆராய்ச்சியாளர்களால் பிரான்சின் "நோயின் சொட்டுகள்" என்று முத்திரை குத்தப்பட்டார், ஒருவேளை ஐரோப்பாவின் முதல் கொவிட் நோயாளியாகக் கூ ட இவர் இருக்கலாம்.

கொவிட் -19 பரவலின் தொடக்கத்திற்கான தடயங்களைத் தேடும் உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களில் இந்த பிரெஞ்சு குழுவும் உள்ளது.

பாரிஸில் உள்ள அவிசென் மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு குழு, அவசர சிகிச்சை பிரிவின்  மருத்துவத் தலைவர் வைத்தியர் யவ்ஸ் கோஹன் தலைமையில், கடந்த மாதம் நோயாளிகளின் குறிப்புகளைத் தேடத் தொடங்கியது.

அவர்கள் 2019 ஆம் ஆண்டின் டிசம்பர் 2 முதல் 2020 ஜனவரி 16 வரை காய்ச்சல் போன்ற நோயால் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை நோயாளிகளின் மருத்துவ பதிவுகளை மறு ஆய்வு செய்தனர்.

ஆய்வின்படி, அவர்கள் நிமோனியா பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 58 நோயாளிகளின் எண்ணிக்கையை 19 ஆக குறைத்து, ஒரு நோயாளிக்கு கொவிட் -19 இருப்பதை உறுதிப்படுத்தினர். அவர் டிசம்பர் 27, 2019 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் 43 வயதான அமிரூச்சி ஹம்மாரி ஆவார்.

logo

Apekshakaya

பிந்திய செய்தி