அமெரிக்காவிற்கு முதலில் பிராண்டிக்ஸ் 200 மில்லியன் முகமூடிகளை ஏற்றுமதி செய்தது.இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் டெப்லிட்ஸிடம் இது ஒப்படைக்கப்பட்டது.

இன் நிகழ்வு பிராண்டிக்ஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயற் குழுவின் தலைவர் பசில் ராஜபக்ஷவும் கலந்து கொண்டார்.

அங்கு அவர் கருத்து தெரிவிக்கும் போது

"அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு உலகளாவிய நுகர்வோருக்கு நம் நாட்டிலிருந்து உயர்தர தயாரிப்புகளைப் பெறுவதற்கான ஒரு தளத்தை உருவாக்கும். பிராண்டிக்ஸ் போன்ற ஆடைத் துறையில் ஒரு முன்னணி பிராண்டுடன் இந்த பயணத்தை மேற்கொண்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ”

இலங்கை கூட்டு ஆடை குழுமத்தின் தலைவர் சுகுமாரன், பிராண்டிக்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்ரஃப் ஒமர், பிராண்டிக்ஸ் அப்பரல் லிமிடெட் வாரிய உறுப்பினர் ரங்கா ரன்முதுகல ஆகியோர் கலந்து கொண்டனர்.

brandi700

கொவிட் 19 தொற்றுநோய் ஏற்படுத்திய தாக்கத்தால் இலங்கையின் வர்த்தக மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் ஏற்றுமதி சந்தையில் பாரிய அளவு வீழ்ச்சி கண்டிருந்தன.

இதுபோன்ற மிகவும் சவாலான சூழலில் கூட, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய 200 மில்லியன் முகமூடிகளை தயாரிக்க முடிந்தது ஒரு மகிழ்ச்சி. இது சந்தேகத்திற்கு இடமின்றி இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கும்  ”என்று பிராண்டிக்ஸ் அப்பரல் லிமிடெட் இயக்குநர் குழு உறுப்பினர் ரங்கா ரன்முதுகல கூறினார்.

பிந்திய செய்தி