1200 x 80 DMirror

 
 

கிழக்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் கல்வி அலுவலகங்களை கொவிட் -19 நிதிக்கு வழங்குவதற்கான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஒரு நாள் சம்பளத்தைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை  ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறினார். இதற்கு அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்மதிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் ஊதியத்தை குறைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார், ஆனால் அனுமதியின்றி ஒரு நாளைக்கான ஊதியத்தை குறைப்பதாக பல்வேறு இடங்களிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொபேகடுவ கொவிட் 19 நிதிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நன்கொடை அளித்ததாகவும், இதனால் அவரது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும், ஆசிரியர்கள் சம்பளத்தை ஜூன் மாதத்தில் குறைக்க உத்தரவிட்டதாகவும் ஜோசப் ஸ்டாலின் கூறினார்.

அரச ஊழியர்கள் சம்பளத்தை கொடுத்துவிட்டு மண்ணை சாப்பிடுவதா?கொரோனா வைரஸ் பரவலாகி வரும் நிலையில் ஜனாதிபதி தனது சம்பளத்தை தியாகம் செய்த போதிலும், அரச ஊழியர்களும் அப்படி தியாகம் செய்ய வேண்டுமென எதிர்ப்பாரத்ததால், அரச ஊழியர்களின் குடும்பம்  மண்ணைத்தான் சாப்பிட வேண்டிவருமென ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கம் கூறுகிறது. 

கொரோனா நிலைமையினால் பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாக மக்களுக்கு விளக்கமளிப்பதற்காக நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அச்சங்கத்தின் பிரதான செயலாளர்

சஞ்சீவ பண்டார மேற்கண்டவாறு கூறினார்.

Sanjeewa Bandara

10 – 15 வருட சம்பளத்தைக் கூட ஜனாதிபதியினால் தியாகம் செய்ய முடியுமாயிருந்தாலும், ஒருநாள் சம்பளத்தைக் கூட தியாகம் செய்யுமளவிற்கு அரச ஊழியர்களின் பொருளாதாரம் இல்லையெனவும் மேலும் அவர் கூறினார்.

மே 16ம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மேலும் விளக்கமளித்த சஞ்சீவ பண்டார,

“தனது மூன்று மாத சம்பளத்தை ஜனாதிபதி தியாகம் செய்ததை வைத்து, அரச ஊழியர்களும் அத்தகைய தியாகத்தை செய்ய வேண்டுமெனக் கூற வருகிறார்கள் போலும். மூன்று மாத சம்பளத்தை ஜனாதிபதி தியாகம் செய்து விட்டதால் அவரது குடும்பம் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுமா? மூன்று மாத சம்பளத்தையல்ல 10 -15 வருட சம்பளத்தைக் கூட அவரால் தியாகம் செய்ய முடியும். என்றாலும், அரச ஊழியர் தனது சம்பளத்தை தியாகம் செய்துவிட்டு மண்ணைத்தான் உண்ண வேண்டும். ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர அரச ஊழியர்களின் சம்பளத்தை கேட்ட போது, அது ஜனாதிபதியின் செயலாளரினது தனிப்பட்ட வேண்டுகோளாகுமென அமைச்சர்கள் கூறினார்கள். ஆனால், சபரகமுவ மாகாண சபை ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை வழங்குமாறு உத்தரவிடப்படுகிறது. அரச ஊழியர்களின் சம்பளத்தை கொள்ளையிடும் திட்டம் நாடு பூராவும் செயற்படுகிறது. பாடசாலை மட்டத்தில் அதிபர்களை வற்புறுத்தி ஆசிரியர்களின் சம்பளத்தைப் பெற முயற்சிக்கப்படுகிறது.

இன்று, கொரோனாவின் பெயரால் சம்பளத்தை பெற்றுக் கொண்டு நாளை வரவிருக்கும் பேரழிவுகளுக்காகவும் அரச ஊழியர்களின் சம்பளத்தில் கை வைப்பார்கள். பொருளாதார வீழ்சிக்கு அரசாங்கத்தின் கொள்கைதான் காரணம். தனியார் துறையினர் சொல்கிறார்கள்  தமது வியாபாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையால் சம்பளம் வழங்க முடியாதென்று. தனியார் நிறுவனங்கள் தொழில் அமைச்சரோடு நடத்திய கலந்துரையாடலுக்குப் பின்னர் தொழிலாளர்களுக்கு 14,500 ரூபா வழங்க வாக்குறுதியளிக்கப்பட்டாலும், 6000 – 7000 என்ற அளவிலேயே வழங்கப்படுகிறது. பெரும் பணக்காரர்களுக்கு கடன் நிவாரணம் வழங்கும் போது, அரச ஊழியர்கள் கடன் பெறுவதற்காக பெரும் பாடு பட வேண்டியுள்ளது. அதுவும் 10 லட்சம் மாத்திரமே கடனாக வழங்கப்படுகிறது. கொரோனா பரவலையும் பொருட்படுத்தாமல் 5000 ரூபா பெற்றுக் கொள்ள மக்கள் முண்டியடித்ததை நாங்கள் கண்டோம்.  இதுதான் மக்களின் பொருளாதார நிலைமை.

பாடசாலைகளில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, இணையத்தளம் ஊடாக கற்பிக்குமாறு கல்வி அமைச்சு பரிந்துரை செய்துள்ளது. பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், அதற்காக பயன்படுத்தும் முறையானது அனைவரும் அணுகக் கூடியதாக இருக்க வேண்டும். online கல்வி முறையானது கல்வியில் காணப்படும் முரண்களை மேலும் தீவிரமாக்கியுள்ளது. தொற்று நோய் காலத்திலும் நாங்கள் கல்வியை முன்னெடுத்தோம் என்று கூறி அரசாங்கம் பெருமையடித்துக் கொள்ள முடியும்.  அதனால் ஏற்படும் பாதிப்பு பாரதூரமானதாகும்”. எனக் கூறினார்.

மேற்படி ஊடகச் சந்திப்பில் ஒன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளரும், ஒன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கத்தின் அனுராதபுரம் அமைப்பாளருமான சுகத் ஜயவர்தனவும் கலந்துகொண்டிருந்தார்.

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி