ஹோமாகமவில் ஒரு தற்காலிக விடுதியில் கொவிட் -19 அறிகுறிகளுடன்  சந்தேகத்திற்கிடமான ஒரு பெண்னுடன் வந்த மற்றொரு நபர் அரசாங்க பாதுகாப்பு பிரிவில் உறுப்பினராக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும், இந்த நபர் நேற்று (21) விடுதியிலிருந்து வெளியேறிவிட்டார். சந்தேக நபரின் பையில் இருந்து ராணுவத்திற்கு சொந்தமான சீருடைகள் மீட்கப்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர். மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.

அவர் சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளைக் கொண்டிருந்ததால் 1990 ஐ அழைத்ததும்   அம்புலன்ஸ் விரைந்து  அவர் நேற்று கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அலவ்வையைச் சேர்ந்த 45 வயது பெண்.

ஹோமாகம சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் ஜகத் குமாரா, இன்று காலை அந்த பெண் குறித்த பரிசோதனை அறிக்கை பெறப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

லாட்ஜ்களைத் திறப்பது சட்டவிரோதமானது என்றும் அவர் மேலும் கூறினார். அங்கு பணிபுரிந்த ஒரு இளைஞன் சம்பவ இடத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக  தெறிய வருகின்றது.

துபாயிலிருந்து வந்த 15 பேருக்கு கொரோனா

இதற்கிடையில், புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1055 ஐ எட்டியுள்ளது.

15 நோயாளிகளில் ஒருவர் குவைத்திலிருந்தும் ஏனையோர் துபாயிலிருந்தும் வந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர் மற்றும் பி.சி.ஆர் சோதனைகளின் போது பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

வெலிசர முகாமில் 2193 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

வெலிசரவில் உள்ள கடற்படை முகாமில் கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட வீரர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 2193 கடற்படை வீரர்கள் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறினார். கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையின் பரிந்துரைகளின்படி வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடற்படை வீரர்கள் முப்படையினரின் உதவியுடன் தனிமைப்படுத்தப்படும் மையங்களுக்கு அனுப்பப்பட்டதாக ராணுவ தளபதி தெரிவித்தார்.

இதுவரை, கடற்படையின் 578 உறுப்பினர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 237 பேர் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்பட்டு முழுமையாக குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.341 கடற்படை வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ராணுவ தளபதி தெரிவித்தார்.

முப்படைகளால் நிர்வகிக்கப்படும் 40 தனிமைப்படுத்தப்படும் மையங்களில் தற்போது 4112 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று ராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.

Apekshakaya

பிந்திய செய்தி