குற்றவியல் திணைக்களத்தின் (சிஐடி) புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஏ.ஆர்.பி.ஜே அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் பணிப்பாளராக இருந்தார் என்று பொலிஸ் தலைமையகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்பு , சி.ஐ.டி.பணிப்பாளராக பணியாற்றிய சிரேஷ்ட பொலிஸ் டபில்யு.திலகரத்ன அமைச்சின் பாதுகாப்பு பிரிவுக்கு பணிப்பாளராக இடமாற்றப்பட்டுள்ளார்.

தற்போதைய அரசு பதவியேற்ற உடனேயே, சிஐடியின் பணிப்பாளராக இருந்த எஸ்.எஸ்.பி சானி அபேசேகர பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக எஸ்.எஸ்.பி டபிள்யூ திலகரத்ன நியமிக்கப்பட்டார்.

புதிய இடமாற்றம் தொடர்பாக பொலிஸ் தலைமையகம் மேலும் கூறியதாவது:

சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர்கள் ஆறு பேர் உட்பட பதினொரு பொலிஸ் உயர் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வரையில் இடமாற்றப்பட்டுள்ளனர்.இதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு  ஒப்புதல் அளித்துள்ளது.

Apekshakaya

பிந்திய செய்தி