நல்லாட்சி அரசு நியமிக்கப்படுவதற்கு முன்பு ரூ. 300-350 ரூபாய்க்கு இடையில் இருந்த ஒரு கிலோ றப்பரின் விலை இப்போது 200-250 ரூபாவாக குறைந்துள்ளது.

காரணம் றப்பர் இறக்குமதி 150% அதிகரித்துள்ளது, இதன் விளைவாக உள்ளூர் றப்பருக்கான கேள்வி குறைந்துள்ளது.

இப்போது நாட்டில் இறப்பர் 75% இறக்குமதி செய்யப்படும் நிலைக்கு வந்துள்ளது என்றும்  அது 90% மாக அதிகரிக்கப்படும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனினும் 21/5/2020 அன்று சுங்க பணிப்பாளருக்கு ஜனாதிபதி செயலாளர் வழங்கிய சுற்றறிக்கையின் 10 வது பிரிவின்படி செஸ் இல்லாமல் றப்பர் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆயினும்கூட, இறக்குமதி செய்யப்படும் நிறுவனங்களின் றப்பர் தேவையில் 50% உள்நாட்டிலும், வெளிநாட்டு விலையை விட 25% அதிகமாகவும் வாங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமிட்ட இறக்குமதியை பிரயோசனமுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று தீர் மானிக்கப்படுள்ளது.

(lankaleadnews.com)

  

Apekshakaya

பிந்திய செய்தி