புதிய கொரோனா வைரஸ் கொவிட் -19 உலகளாவிய தொற்றுநோய் கட்டுப்பாடுகளை மீரியதற்காக ருமேனிய பிரதமர் லுடோவிக் ஒர்பனுக்கு (Ludovic Orban) 600 அமெரிக்க டாலர் அபராதம் சுமார் (ஒரு இலட்சத்து பதினாயிரத்து எழுநூறு ரூபாய்) அபராதம் செலுத்த வேண்டியுள்ளது.

அதன்படி, சிகரெட் புகைத்தல் மற்றும் அரசாங்க கட்டிடத்தில் கூட்டத்தை ந டத்தியதன் விளைவாக பிரதமர் லுடோவிக் ஒர்பனுக்கு அபராதம் செலுத்த வேண்டியுள்ளது..

அந்த கூட்டத்தில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர் அவர்களில் எவரும் சமூக அந்நியப்படுத்துதலுக்கான கட்டளைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் இணங்கவில்லை என்று ஏ.பி.செய்தி சேவை தெரிவித்துள்ளது.

ருமேனிய ஊடகங்களும் இந்த சம்பவத்தின் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளன. புகைப்படங்களில் ருமேனிய பிரதமரும் மற்றும் பலரும் புகைபிடிப்பதையும், உணவு மற்றும் மது பாட்டில்களை தங்கள் மேசைகளில் வைத்திருப்பதையும் காட்டுகின்றன.

Rumenia PM

புகைப்படத்தில் உள்ளவர்களில் எவருக்கும் முகமூடிகள் இல்லை என்றும், அவர்களில் யாரும் பாதுகாப்பான சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவரது பிறந்த தினமான மே 25 அன்று இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக ருமேனிய பிரதமர் மீடியாஃபாக்ஸ் செய்தி சேவையிடம் தெரிவித்தார். இந்நிகழ்வில் ருமேனியாவின் வெளியுறவு மற்றும் பொருளாதார அமைச்சரும் கலந்து கொண்டார்.

ருமேனியாவில், நேற்றைய,31 நிலவரப்படி 19,133 பேரிடம் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது , மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் 1,259 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் இப்படி நடப்பதில்லை

PM Jeewan

PM w 

logo

Apekshakaya

பிந்திய செய்தி