நேற்று (9) லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் முன்னிலை சோஷலிஸக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளான இளைய பெண் அரசியல் போராளி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

சில பொலிஸ் அதிகாரிகளினால் ,மனிதநேயமற்ற முறையில் கைது செய்யப்பட்ட ரஸ்மி திவ்யாஞ்சலி நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டு காலிக்கு செல்லும்போது மயக்கமடைந்துள்ளார். பின்னர் உடனடியாக கராபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படட அவர் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இவர் முன்னிலை சோஷிஸக் கட்சியின் இளைஞர் பிரிவான  Youth for CHEenge அமைப்பின் காலி மாவட்ட செயற்பாட்டாளராவார்.

53 ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கையின்போது அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பொலிஸ் வண்டிக்குள் வீசியெறியப்படும் காட்சிகள் ஊடகங்களில் வௌிவந்துள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள்  கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் இரவு வரை தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கோரப்பட்ட போதிலும் பொலிஸார் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர் தடயவியல் அதிகாரிகளிடம் காட்டப்பட்டபோது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வேண்டுமென்றால் வைத்திசாலைக்கு செல்லுமாறு கூறப்பட்டது.

ஆர்ப்பாட்டம் செய்தமைக்காக கைது செய்யப்பட்டவர்கள்  இரவு 10 மணிக்கு நீதிபதியின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களுக்கு பிணை வழங்கப்படடது.  பொலிஸாரின் மிருகத்தனமான தாக்குதலுக்கு ஆளான சிலர், இன்று சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Apekshakaya

பிந்திய செய்தி