கொரோனா தொற்று பரவிய காலத்தில் குத்தகை கடன் தவனை செலுத்த அரசாங்கம் வழங்கியிருந்த நிவாரண காலத்தை பொறுட்படுத்தாமல், வாகனங்களைக் கைப்பற்றிய குத்தகை மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களுக்கு எதிராக வாகனம் திருடியமை அல்லது கொள்ளையடித்தமை ஆகிய குற்றங்களின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மாஅதிபர் சகல பொலிஸ் நிலைய பொறுப்பதகாரிகளுக்கும பரிந்துரை செய்துள்ளார்.

அரசங்கம் வழங்கிய நிவாரணக் காலத்தில் குத்தகை கடன் தவனை செலுத்தத் தவறியதாகக் கூறி, வாகனங்களை கைப்பற்றிக் கொண்டு பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு செய்ய வரும் குத்தகை மற்றும் நிதி நிறுவனங்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் பதில் பொலிஸ் மாஅதிபர் மேலும் பரிந்துரை செய்துள்ளார்.

குத்தகை கடன் தவனை செலுத்தத் தவறியதாகக கூறி வாகனங்களை கைப்பற்றுவதற்காக குத்தகை மற்றும் ஏனைய நிதிநிறுவனங்கள் செய்யும் முறைப்பாடுகளை ஏற்க வேண்டாமெனவும் பொலிஸ் மாஅதிபர் பரிந்துரை செய்துள்ளதாகக் குறிப்பிட்டு பொலிஸ் ஊடக அறிவிப்பாளரும் பொலிஸ் அதிபருமான ஜாலிய சேனாரத்னவின் ஒப்பத்துடன் அறிக்கையொன்று வௌியிடப்பட்டுள்ளது.

logo

Apekshakaya

பிந்திய செய்தி