முன்னாள் நிறுவன நிறைவேற்று அதிகாரியும் எழுத்தாளருமான ரஜீவ் ஜயவீரவின் மரணம் நிகழ்ந்த போது அப்பகுதியிலுள்ள பாதுகாப்புக் கமராக்கள் செயற்பாடாமை காரணமாக அது இன்னுமொரு மனிதப்படுகொலையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஒரு காலத்தில் ‘சிறிலங்கன்’ நிறுவனத்தின் நிறுவனத்தில் பணியாற்றிய அவர்,  அந்த விமான நிறுவனத்தின் உள்ளக தகவல்களை வௌிப்படுத்தியமையால் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருந்தார்.

மிஹின் லங்காவிவில் நடந்த முறைகேடுகள் சம்பந்தமாக வௌிச்சத்திற்கு கொண்டு வந்த ஜயவீரவின் சடலம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கொழும்பு 07, சுதந்திரச் சதுக்கத்திற்கு அருகாமையில் கடந்த 12ம் திகதி காலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. சிறிய கைத்துப்பாக்கியொன்றினால் தனது வாய்க்குள் வெடி வைத்துக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கக் கூடுமென தீர்மானித்த போதிலும், ஊரடங்கு அமுலிலுள்ள இரவில் சுதந்திரச் சதுக்கத்திற்கு எப்படி வந்தார் என்பதும், அதுவும், பாதுகாப்புப் பிரிவினருக்குத் தெரியாமல் எப்படி வந்தார் என்பதும் சந்தேகத்திற்குரிய விடயங்களாகும்.

பொது மக்களின் பணத்தை பில்லியன் கணக்கில் நாசமாக்கி, ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளை கோடீஸ்வரர்களாக்கிய மிஹின் லங்கா நிறுவனம், ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் ஊழல் மோசடிக்கு உதாரணமாகும். பிற்காலத்தில் இந்த நிறுவனத்தை போன்றே சிறிலங்கன் நிறுவனத்தின் ஊடாகவும் பொதுமக்களின் பணம் நாசமாக்கப்படடமை சம்பந்தமாக ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் உயரதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. விசேடமாக சிறிலங்கன் நிறுவனமானது எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் ஊடாக பில்லியன் கணக்கான மக்கள் பணத்தை நாசமாக்கியமை தொடர்பிலும் வௌிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டது.

எவ்வாறாயினும் மிஹின் லங்கா நிறுவனத்தின் ஊழல் மோசடிகளை  வௌிச்சத்திற்கு கொண்டுவந்தமையால் எவராவது ராஜீவ் மீது கடுங் கோபத்தில் இருந்தார்களா என்பது தெரியவில்லை. என்றாலும், அவரால் கடைசியாக எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் பகிரங்கப்படுத்தப்பட்தன் பின்புதான் அவர் தற்கொலை செய்யுமளவிற்கு சென்றுள்ளார் என்பது அவருடன் நெருக்கமானவர்களுக்கும் தெரிய வந்துள்ளது. தாஜுதீனின் படுகொலை மற்றும் அவ்வாறான படுகொலைகள் சமபந்தமாக இதற்கு முன்பு வௌியிடப்பட்ட அறிக்கைகளுக்கும், உண்மைக்கும் உள்ள இடைவௌியை பார்க்கும்போது, இந்தக் கடிதம் அல்லது இவருடைய மரணம் சம்பந்தமான பொலிஸாரின் முடிவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

பொதுவாக, எந்தவொரு குற்றச் செயலுடனும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை ஓரிரு நாட்களிலேயே கண்டுபிடிக்கும் பொலிஸ், சந்தேக நபர்களை கைது செய்ய முடியாத சந்தர்ப்பங்களில் அவை பிரபல அரசியல் சக்தியொன்றினால் வழிநடத்தப்படும் குற்றங்களாகும் என்ற கருத்தும் மக்கள் மத்தியில் உள்ளது. வசீம் தாஜுதீன் படுகொலை போன்றவை இதற்கு உதாரணங்களாகும்.

தாஜுதீன் தனது வாகனத்தை விபத்துக்குள்ளாக்கி மரணித்துள்ளதாக பொலிஸ் பிரதானிகளும், சிரேஸ்ட நீதிமன்ற தடயவியலாளரான ஆனந்த சமரசேகரவும் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். குற்றங்களை மறைப்பதற்கு உதவும் அப்படியான நபர்களும் குற்றச் செயலோடு சமபந்தப்பட்டதாகக் கருதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ராஜீவின் மரணம் அதைப்போன்றதொரு படுகொலையாயின், கொலையின் சந்தேக நபர்களை பொலிஸ் ஒருபோதும் கண்டுபிடிக்கப் போவதில்லை.  சில பத்திரிகைகளுக்கும், இணையத்தளங்களுக்கு அவர் எழுதிய கட்டுரைகளில் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியின் மீது குற்றம் சுமத்தக் கூடிய வில விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்தி