நாடு திறந்து மூன்று வாரங்கள் கழித்து, சமூகத்திலிருந்து எந்த கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கூறியுள்ள நிலையில் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அனுராதபுரம் கெபதிகொல்லாவையிலிருந்து பதிவாகியுள்ளார்.

குறித்த பெண் குவைத்தில் இருந்து நாடு திரும்பி வந்து கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஹோமாகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதிசெய்ததை அடுத்து 36 வயதான அப்பெண் அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அனுராதபுரம் கெபதிகொல்லாவையிலுள்ள தனது வீட்டிற்கு திரும்பிய பின் சளி மற்றும் இருமலின் அறிகுறிகள் காணப்பட்டதால் குறித்த பெண் நேற்று அனுராதபுர போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின்படி, அந்த பெண்ணின் உடலில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து அவர் ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

logo

Apekshakaya

பிந்திய செய்தி