கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் புலனாய்வுப் பிரிவைச் சேர்நத காவலரொருவர்  தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த காவலர்  பொலிஸ் நிலைய அலுவலகத்திற்குள் தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 21 வயதுடைய காவலாளராவார்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிலாபம், மாதம்பை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 26 வயதுடைய ஒரு பொலிஸ் காவலர் அதே பொலிஸ் நிலையத்தில் வைத்து கடந்த 16ம் திகதி தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Apekshakaya

பிந்திய செய்தி