ராஜினாமா செய்வதை விட்டு விட்டு உங்களது அறிவை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுத்துங்கள் என்று நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மனிடம்  கேட்டுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தபோது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய வங்கி ஆளுநரின் ராஜினாமா அரசாங்கத்திற்கு கடுமையான இடையூறாக இருக்கக்கூடும் என்பதால், பிரதமர் அவரது கோரிக்கையை மீள் பரிசீலிக்குமாறு மத்திய வங்கி ஆளுநரிடம் கேட்டுள்ளார்.

காலாவதியான பொருளாதார விதிகள் குறித்து அறிக்கை வழங்குமாறும், செழிப்புக்கான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குமாறும் பிரதமர் மத்திய வங்கி ஆளுநருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Apekshakaya

பிந்திய செய்தி