கொரோனா தொற்று காரணமாக உருவாகியிருந்த நிலைமையை கருதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரச அதிகாரிகளின் கடன் தவனை மற்றும் கடன் வட்டி இம்மாத சம்பளத்திலிருந்த அறவிடப்படவிருப்பதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி கூறியுள்ளார். இது தொடர்பிலான சுற்று நிருபமொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோன நிலைமை காரணமாக அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த கடன் மற்றும் முற்கொடுப்பனவுக்குப் பதிலாக, அறவிடப்பட வேண்டிய கடன் தவனை மற்றும் கடன் வட்டி அறவிடுவதை நிறுத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் கூறியிருந்தது. என்றாலும் பின்னர் அவை அறவிடப்பட்டிருந்ததோடு, அறவிடுவதை நிறுத்த வேண்டுமாயின் கடிதம் மூலம் விண்ணப்பிக்குமாறு அரச ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நோய் தொற்று காரணமாக கடமைக்குச் செல்லும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண காலத்தை திணைக்கள மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு வேண்டியவாறு தொடர்ந்தும் நடாத்திச் செல்லுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக செயலாளர் கூறியுள்ளதாகத் தெரிய வருகின்றது.

Apekshakaya

பிந்திய செய்தி